It கலைமகன் கவிதைகள்: உனை நினைத்து இக்கணமும் இயற்றுகிறேன் பா!

திங்கள், 23 செப்டம்பர், 2013

உனை நினைத்து இக்கணமும் இயற்றுகிறேன் பா!



வாழ்வில் பாரிய மாற்றங்கள் நிகழலாம்...
வசந்தம் கூட வழிநெடிகிலும் வரலாம்.....
என்றாலும்,
அடிமனதில் ஆழவேரூன்றி
அடையமுடியாமல் இருந்த அன்புக்காய்
அழுது கொண்டிருக்கும் உள்ளம்....

எப்படிச் சொல்ல என்று
உள்ளம் 
எடுப்பார் கைப்பிள்ளை போலும்
வேடிக்கை பார்த்ததால்...
உறவென்ற உலையில்
தீப்பற்றும் என்றும் நிலையால்...
உள்ளத்து உறவாக இணைந்திட
உள்ளம் தவித்தபோதும்,
'அண்ணா.... அண்ணா.............' என்றே
அந்தக் குரல் அழைத்ததால்....
தங்கையாகியே போனது மனசீகக் காதல்...

என்றாலும்
எப்படியோடியோ
லாவகமாய் என்னுள் என்னுறவு
ரீங்காரமிடுகின்றது கவிக்குரலாக...
பாசம் நீங்கா பேரொலியெழுப்பும்
சாகாரமாய்...
சாகாவரமாய் என்றும் என்னுள்....

எனக்குள் பலபொழுது 
அழுது கொள்கிறேன்... என்னை
என் இயலாமையை எண்ணி...
ஒருதலைக் காதலை எண்ணி...

என்றாவது என் மதலைகளாவது
என்னன்பின் பிணைப்பில் பிறந்த
உறவுகளோடு கைகோக்க
உறவென்று ஒதுங்காது கடிமணம் செய
உள்ளத்து வேதனையொடு
ஊர் உறங்கும் வேளை 
எழுதுகிறேன்.. அவாக் கவிதை.....


விரும்பிய நல்லுறவை
நல்லுறவாக கொண்டேன்...
எப்படி மறப்பதாம் நான்...

என்றாலும்
என்பதிக்குத் துரோகம் இழைக்காமல்
பந்தமாய் 
அவளில் பாதியாய்
வாழ்கிறேன் நான்.. சிலபோழ்து மட்டும்
ஏக்கங்களுடன்
அவள் முதலெழுத்து என்முன்நிற்க....
கரம் பிடித்தவளிடம் கதைசொன்னேன்.
நாணத்துடன்... 
என்றாலும்
மனதுல் - அடிமனதின் ஆழத்துள்
குடிகொண்டவளுக்கு எங்கே தெரியப் போகிறது
என் ஒருதலைக் காதல்....

சில நேரம் அவளுக்குள்ளும்
அந்த அன்பூற்று
ஏக்கங்களாக வெடித்திருக்கலாம்...
கவிதை காணும் நேரம்
பெருமூச்சு விடலாம்....

யார் காண்பதாம்.....?

இலவம் பஞ்சுக்கு ஏங்கிய கிளியாய்
என்ன செய்ய நான்....?

என்னுடனேயே இறக்கிறது எனது 
சில கனாக்கள்...


(கவித்தீபம் இஸ்மாயில் எம். பைரூஸ்)
2013/09/23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக