It கலைமகன் கவிதைகள்: என்னை அழவிடு நீ!

சனி, 28 செப்டம்பர், 2013

என்னை அழவிடு நீ!

வேண்டாம் இதயத்தைக் கனக்கச் செய்ய
நீ உன் பாட்டில் இரு!
தனிமையில் துன்பந்தாங்க
என்னால் இயலும்....

விழிகளில் கண்ணீர் வழிந்தோட
என்னை அழ விடு...
அந்தக் கண்ணீரை துடைக்க
வேண்டவே வேண்டாம்
உன்பாட்டில் நீ இரு...

தீ மூட்டிய இதயத்தை
நிம்மதியாக்க
என்னை நானே வறுத்திக் கொள்ள
ஏதேனும் எனக்குச் சொல்....

கண்ணீர் முத்துக்களை ஒன்றிணைக்க

இன்னும் என்னை அழவிடு
உன்னால் பொறுக்க வியலாது போனால்
முடியுமா உன்னால்
என்னை அணைத்துக் கொள்ள....

சிங்களத்தில்: சமன் எதிரிமுனி
தமிழில்: கலைமகன் பைரூஸ்

සිංහල - සමන් එදිරිමුණි
දෙමළ පරිවර්තනය - කලෛමහන් පයිරූස් (වැලිගම - මදුරාපුර)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக