It கலைமகன் கவிதைகள்: நற்றமிழையே ஏத்து!

சனி, 5 மே, 2018

நற்றமிழையே ஏத்து!

தமிழனாய் பிறந்தோரில் பலர் தாய்த் தமிழை மறந்தின்று உமியுள அரிசிபோலத் தமிழை உரக்கவே சொல்கின்றார் அடச்சீ! சோவெனப் பெய்யும் மழைபோல “சோ”வும் “பட்”டும் வந்தாச்சு நோவினை யேயுளமெங்கு மிதனால் நோயுளோர் பற்றிஏதுசொல்வேன் சீ!


இதமான தமிழ்பேசு வோரை இகழ்ந் தேதள்ளுவர் இன்று விதவித மாய்த்தமிழ் பேசியே விந்தைதான் செய்கின்றார் அடச்சீ! தமிழனுக் கழகாய்ப்பாரில் பெயர் தந்தது எதுவோ நற்றிமிழே உமிநீக்கி யுணும் அரிசிபோல் உயர்ந்த நற்றமிழை உன்னுநீ! பிறமொழி விரும்பிடு பிழையிலை பிதற்றா ததிலேநீயூறி மகிழாதே நிறமொழி ஒன்றாய் எண்ணு நிலத்தில் தமிழையே ஏத்து! நாலுமிரண்டும் அணிகல னைந்தும் நல்லிலக் கணநூல்பல தந்ததேது? நீளுமுன்புகழ் நீட்டிடுவதேது? நிலத்தில் நற்றமிழை உன்னுநீ! -கலைமகன் பைரூஸ் 05.05.2018








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக