It கலைமகன் கவிதைகள்: பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே

ஞாயிறு, 13 மே, 2018

பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே

குமரிக் கண்டம் தமிழ்ப் பாவலர் சோலை

காதல் கவிதைப் போட்டி - 1---------------------------------------
பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே

--------------------------------------------------------------------
அன்பான மச்சி எந்தன் உயிரே
அகத்துக்குள் குடிகொண்ட பொன் மயிலே
உன் பாதக் கொலுசொலி கேட்கையிலே
உயிரில் ஏதோ ஆகுதடி குயிலே...

ஆடிவரும் உன்னெழிலும் அழகுந்தான் ரதியே
ஆட்டம் காட்டுதடி மனசில் பதியே
ஓடிவராமலே கொலுசொலி தான் கனியே
ஒய்யாரமாய் உயிரை காவுகொள்ளுதடி மதியே!



இதயத்துள் ஒட்டியுள இதமான வஞ்சியே
இதயத்தை இறுக்கியே கொல்லுதடி மணியே
இங்கிதமான உன் பாதக்கொலுசின் ஒலியே
இங்கென்னை அருகணைக்க மெய்யாய் உனையே
ஈர்க்குதடி மயிலொப்ப கார்குழல் உனையே!

ஈரல்கொழுந்தே இரக்கமுள்ள என் துணையே
இங்குவந்து எனைசேர்ந்து நல் உறவினையே
தந்துவிடச் சொல்லுதடி யெந்தன்மாமி மகளே
பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே!

உன்பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே
உன்னருகில் நான்வந்து எங்ஙனம் பேசுவேனோ?
உன்மத்தம் தானடி என்னுயிரே உன்னாலே
உறக்கமிலை இக்கணமும் கொலுசொலியே கதியே!

ஊனில்லை சிந்தையெலாம் கலந்துள பாவையே
ஊரிலுள எனக்குத்தான் உன்னுயிர் எனுமாப்போலே
பாதக் கொலுசொலி பாதையில கேட்கையிலே
நாதியின்றி என்மேல நாட்டமெலாம் உன்மேலே!

-கலைமகன் பைரூஸ்

இலங்கை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக