தண்ணிக்
குடமெடுத்து தனிவழி போறவளே!
தங்கிநின்று
எந்தன் கதையக் கொஞ்சம் கேளடி!
உன்மேல
உசிரு
நான்தான் கிளிபோன்றவளே!
உதாசீனம் எனைச் செய்யாதே எந்தன் மயிலே!
பொன்னான
மச்சி நீயில்லயா? என்னவளே
பொக்கிசம்
நீதான் உடல்மீது உயிர் நீயல்லோ?
என்கண்ணான
மச்சி தண்ணிக் குடமெடுத்து
எங்கதான்
போற.. கொஞ்சம் கதைத்துச் செல்லு!
உன்னம்மை
உன்ன எனக்காகத்தான் பெற்றாள்
உன்மத்தம்
உன்னில் எனக்குத்தான் பற்று
என்னவளே
உனக்கு தண்ணி எடுத்துத் தரட்டா?
என்னோடு
நீ கலந்து அன்பக் கொட்டடி பூவே!
தண்ணீருக்குள் சாதியில்ல
எப்பேதமுமில்ல
தங்கமே
உனக்குள் என்னப்பற்றி தெளிவுமில்ல
புண்ணியமே
பெரும்புண்ணியமே
நீதானடி
பாவை
நீயெனக்கு புன்முறவலொன்று காட்டிடடி!
தண்ணிக்
குடமெடுத்து தனிவழி போறவளே
தாங்குதில்ல
என்மனசு உன்மனச சேருமட்டும்
எண்ணி
ஒருகணந்தான் என்னப்பற்றி நீ
எடுப்பாக
அம்மை அப்பனுக்கு சொல்லிடடி!
வஞ்சிக்
கொடியே வனப்பான நீலவண்டே
வடிவான
சேலகட்டி எங்கதான் நீயும்போற
நெஞ்சமெல்லாம் நயக்குது
உன்னத்தானே
நீரல்ல
நானும் வரட்டா கண்ணே உன்னோடதான்!
-“கவித்தீபம்” கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக