It It கலைமகன் ஆக்கங்கள் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

இரவின் நிறம் | மனங்களைச் சல்லடையாக்கிய நிகழ்வின் நிழல் | கலைமகன் பைரூஸ்

இரவின் நிறம் சிவப்பு

✍️ கவிதை வடிவம் – கலைமகன் பைரூஸ்

இரவின் நிறம் சிவப்பு,
இமைகளை வெட்டிய ஒரு பதட்ட நொடி.
03–08–1990...
நாள் ஒரு துவக்கம்,
முடிவின்றிப் பிழைக்கும் நினைவுகள்.

மஹ்ரிப் ஒலியின் பிறகு,
மோட்சக் குரலில் தோன்றிய
மௌன சத்தங்களின் பயணம்…
ஜவ்பர், ஜுனைதீன், ஆரிப் – அன்ஸார்...
பள்ளிவாயில் படிக்கட்டில் –
காலத்தின் கணக்கின்றி உரையாடல்கள்...

விழிப்புக் குழுக்கள்…
வீதி காத்த உறவுகள்...
கோப்பையாகச் சிந்திய தேநீரில்
உறவுகளின் உருக்கமான உழைப்பு.
அதான் முடிவதற்குள்
இஷா தூண்டியது!

ஆரிப் தொழுவதற்குச் செல்வதுதான்
அவனுக்கே கடைசி தொழுகை என்றார் யாரும்?
தேத்தண்ணீர் சுடுகிறது,
சைக்கிள் பூட்டும் திறக்க மறுக்கிறது,
இச்சுடர்க் கடிகாரம்
சுடும் விபரீதத்தைக் குறிக்கிறது.

திடீரென...
மீரா ஜும்ஆ பள்ளியைத் துளைக்கும்
துப்பாக்கிக் குரல்கள்...
வெடிப்புகள்... துள்ளும் இரத்தங்கள்...
காணாமல் போன இறை அன்பு...

“பள்ளிக்குள் புகுந்து விட்டார்கள்!”
என்ற சப்தத்தில்
உறைகிறது உடல், உருகுகிறது உள்ளம்...
நாங்கள் சைக்கிளோடு ஓடினோம்,
மோதினார் லேன் வழியாக
பாதை காணாத பயத்தில்.

ரஸாக்கியா சந்தியில்
பயங்கர வனவெறி சொற்கள்
வாசலாக புலிகளின் கோரத்தைக் கூறின.
"வீட்டுக்குப் போவதா? பள்ளிக்கா?"
எனத் தயங்கிய நெஞ்சம்
"பள்ளிக்கே!" என்று ஓடியது.

துணிந்த பக்கத்தில்
ஓர் முணுமுணுப்பும்...
மறைந்த ஷஹீத்களின் ஓசையும்...
அழுதுகொண்டே அவன் வந்தான் –
“அன்ஸார்…!” – என் மாமா…
இறக்கைகள் இழந்த புறாவாய்
ரத்தக் கரையில் நனைந்தது உறவு.

ஜுனைதீனின் வாப்பா, ஜவ்பரின் வாப்பா, ஆரிப்…
அனைவரும் வீழ்ந்தார்கள்…
ஆயிரம் கதறல்கள் மீதமாக
அழுகுரலில் பூத்திருந்தது ஊர்.
மொத்த ஊரின் இரத்தம்
ஒரு பள்ளி வாசலில் கசிந்தது.

அல்லாஹ்வின் பெயரில்
சுமந்தவையைச் சுட்டது மனிதக் கோழைத் துப்பாக்கி.
வாயில் முன்னே செங்குருதி...
அடையாளம் இல்லாத உடல்கள்...
பச்சையாகவே
வீழ்ந்தனர் நூற்றி மூன்று பேர்கள்!

அல்லாஹ்வின் வீடு –
இறக்கிறது மரணக் குரல்களால்.
மீண்டும் உதிக்குமா அந்த சூரியன்
மீரா ஜும்ஆப் பள்ளியின் கூரையில்?

மத்தியில் தோண்டிய ஒரே ஒரு கப்ரு
மூடுகிறது நூற்றி மூன்று கண்ணீரால்...
மழை போல் விழும் மக்கள்…
பேரழிவு சாட்சி அந்த இரவில்...

இரவின் நிறம்
மறுநாள் தூங்காதவர்களுக்குப் புரியும்.
அந்த இரவில்...
இரவின் நிறம் – சிவப்பு.


- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

📘 The Night Was Crimson

✍️ A Poem by Kalaimagan Fairooz

The night turned crimson,
In a fleeting flash that slit through the eyelids.
03–08–1990…
A day began—
And memories that never ended.

After the call of Maghrib,
In the echoes of sacred tones,
Journeyed the unspoken voices…
Jawfar, Junaideen, Aarif – Ansar…
At the mosque stairs,
Endless conversations with no clocks.

Vigil circles…
Streets guarded by kin…
Steaming tea that carried the warmth of struggle.
But before the night closed,
Isha called once more!

Who knew that would be
Aarif’s final prayer?
The boiling water spills…
The cycle lock refuses to turn…
And the glowing clock
Points to an unspeakable horror.

Suddenly—
Gunfire pierced through Meera Jumma Mosque…
Explosions… Spurting blood…
Love lost to shadows…
“They’ve entered the mosque!”—
That shout froze our bodies,
Melted our souls.

We rode with our bicycles,
Down Moathinar Lane
In fear without a road to follow.

At Rasaqqiya Junction,
Words of terror whispered
The horror of the Tigers.
“Home? Or the mosque?”
Our hearts hesitated,
But ran toward the mosque.

A murmur on the daring path…
The silence of fallen martyrs…
He came, in tears—
“Ansar…” – my uncle…
A dove stripped of wings,
Drenched in blood—my kin.

Junaideen’s father, Jawfar’s father, Aarif…
All fell.
A thousand cries
Bloomed in a mourning town.
The town’s lifeblood
Spilled at the mosque’s doorstep.

In the name of Allah,
The coward’s gun fired upon worship.
Blood before the entrance…
Bodies without names…
103 souls fell—green, untouched.

Allah’s house
Echoed with the voice of death.
Will the sun ever rise again
Over Meera Jumma Mosque?

One grave dug at the centre—
Closed with a hundred and three tears.
Rain-like weeping…
That night bore witness to genocide.

The color of that night
Is understood only by those who never slept.
On that night…
The night was crimson.

– With remembrance, Kalaimahan Fairooz

வியாழன், 31 ஜூலை, 2025

நானிருப்பேன் அன்றும்! - கலைமகன் பைரூஸ்

நானிருப்பேன் அன்றும்!

இன்னும் ஒரு தலைமுறையாகும் போது இவன் யாரோ? என்று என் படத்தைப் பார்த்து என் தலைமுறை கேட்க முயலும்? அப்போது இவன் அவன்தான் என எனது உயிர்மூச்சுச் சொற்கள் என்னைச் சொல்லும்...

புதன், 23 ஜூலை, 2025

மழையின் வெந்தடம் – ஹைக்கூ

மழையின் வெந்தடம் – ஹைக்கூ மற்றும் விளக்கம்

சோவெனப் பெய்கிறது மழை
மாடாய் மடிகிறான்
நெற்றியில் சுடுநீர்

கலைமகன் பைரூஸ்

விளக்கம்:

மழை என்பது இயற்கையின் புனித அருள்பொழிவாகத் தோன்றினாலும், இந்த ஹைக்கூவில் அது சற்றே வேறுபட்ட உணர்வோடு வருகிறது.

சனி, 12 ஜூலை, 2025

📜 கலைமகன் கவிதைகள் –புதுமெருகுடன் நாள் 1

1. வாடும் முகங்கள்

வாடும் முகங்கள் தெருவோரம்,
வெறும் கைகளால் வாழ்வுரோகம்;
கண்ணீர் தொட்ட பூமியில்,
கருணையின்றிப் போகலாமா?

விருந்தாக விழும் விழாக்கள்,
விளக்கிழந்த குடிசைகளில் கிடையாது.
வாய்க்கு மட்டுமே உணவு அல்ல,
மனமோடும் பகிர்ந்தல் உணவுதான்.

ஞாயிறு, 15 ஜூன், 2025

பசுமை பேசட்டும்! பாடல் - கலைமகன் பைரூஸ்

🌿 பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!

மரங்கள் பூத்திட, உயிர்கள் வாழட்டும்!
காற்றுகள் வீசியே, பனித்துளி வந்திடும் –
பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!

திங்கள், 28 ஏப்ரல், 2025

பள்ளிகள் காய்ந்து போகின்றன... அங்கலாய்க்கிறேன் நான்!


---------------------
(இது இயக்கம் சார்ந்த பதிவே அல்ல.. )
---------------------

ஜும்ஆக்களின் முழக்கள்
செவிடர்களின் காதுகளில்
அகலவே ஒலிக்கின்றன...
ஜும்ஆவைக் கேட்பதற்கு
இரண்டாம் ரக்ஆத்தில்
வருகின்றார்கள் - அவர்கள்

சனி, 26 ஏப்ரல், 2025

அந்த ஐந்து நாட்கள்! - சிக்கன் குன்யாவா? டெங்குக் காய்ச்சலா?

காய்ச்சலும்  தலைவலியும் தனக்கு வந்தாற்றான் தெரியும்...

கடந்த ஒரு வாரத்திற்கு முன் கடும் காய்ச்சல் காரணமாக, கை - கால்களில் பலமின்றியிருந்ததனால், எனது தம்பி என்னை தனியார் மருத்துவமனைக்கு அந்திப் பொழுதில் அழைத்துச் சென்றார். 

குலைப்பான் காய்ச்சல் போன்றிருந்தது. வைத்தியர் என்னைப் பார்த்துவிட்டு, இரத்த அழுத்தத்தையும் சோதித்துவிட்டு என்னை மாத்தறை போதனா வைத்தியசாலையில் உடனே அனுமதிக்குமாறு கோரினார்.