புதன், 20 ஏப்ரல், 2016

மெய்யொடு வாழ்வாய் நீ!

மும்மையும் மலராய் படைத்தவன்
மதியினும் மேலாய் தந்தானென்கு
இம்மையினில் சீராய் ஒருமகவு
இன்னலில்லை இடுக்கணிலை இவள்
அருகிருக்க கவலையே இலைஎன்னில்!
----
காரிருள் தோற்கும் இவள் சிகையில்
கதிரவன் தோற்பான் இவள் ஒளியில்
கணைகள் தோற்றிடும் இவர் நுதலில்
கதிரவன் ஏங்குவான் வால் எயிற்றில்…
----

வியாழன், 31 மார்ச், 2016

கனவு! - மௌலவியா றுஷ்தா இப்ராஹீம் (B.A) (அஷ்பா)

காத்திருப்புகளும் எதிர்பார்ப்புகளும்
உதிக்குமே என்றென்றும்
கானலின் தூரலாய்
துயிலின் மத்தியிலே...........
  
நிறைவேறா ஆசையை
நிறைவேற்றும் யுத்தியாய்
மானிடரை மூழ்கடிக்கும்
மந்திரமான வலையதுவே.........

சனி, 26 மார்ச், 2016

சாதி சாதித்ததென்ன சோதி!

சாதி சாதியென்றே சிறுமைத்தனத்து
சங்கடந்தான் பிறர்க்கீயும் சாதிபேசி
நீதவான் நாங்கள் தானெனப்பேசும்
நீதமற்றாரின் பண்பை ஏதென்பேன்!

உயர்சாதி நாமென்று பிறரைத்தான்
உயர்விலா இழிசாதி என்றுரைத்து
பெயர் புதியன அவர்க்கியற்றி
பெருமை பெற நினைப்பவரீனர்!

செவ்வாய், 22 மார்ச், 2016

நிலத்தின்மீது ஏது குற்றம்?

சிசுப் பருவம் முதல் சிரசுபழுத்து
பாடையினின் போகுமட்டும்
மனுக்குலத்திற்காக உழைத்த
தருக்களில்
பாவி மனிதன்
காமுற்று கற்பழித்ததால்
நீர் கருச்சிதைவாகின…
ஓங்கி உயர்ந்த பருவதங்கள்
இது கண்டு
கடும் வக்கிரத்துடன்

சனி, 19 மார்ச், 2016

உலகக் கவிதைத் தினக் கொண்டாட்டம்

உலகக் கவிதைத் தினக் கொண்டாட்டம் 2016 மார்ச் மாதம் 21 ஆந் திகதி கொழும்பு - 7 இல் அமைந்துள்ள தாமரைத் தடாக அரங்கில் நடைபெறவுள்ளது. 

உள்ளக அலுவல்கள் , வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள்

வியாழன், 17 மார்ச், 2016

பெற்றோர் இன்பம் ஏதில்?

அன்னை தந்தை தன்பிள்ளை அருமந்த பிள்ளையாய்வரவே

என்றும் நல்லன வியற்றுவர் தம்முயிர் வாட்டியேதான்
மண்ணினின் சிறந்தோன் தன்பிள்ளையே யெனக்கேட்க இவர்
பொன்பெற்றதாய் நினைவர் பாரினி லுயர்ந்தோர் பெற்றோரே
-கலைமகன் பைரூஸ்

வியாழன், 10 மார்ச், 2016

புன்னியாமீன் எனும் ஆளுமை!

பிரபல எழுத்தாளும், ஆசிரியப் பெருந்தகையும், பன்னூலாசிரியருமான கண்டி, உடத்தலவின்னை மடிகேயைச் சேர்ந்த பீ.எம். புன்னியாமீன் இன்று இயற்கையெய்தினார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அவரின் நினைவாக இந்தக் கவிதை எழுதப்படுகின்றது.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

மாகாவியம் வரட்டும்! -கலைமகன் பைரூஸ்

வைரமான வரிகள் தரும் வைரமுத்து
உங்களுக்கே சொந்தமான வரிகள்…
உங்களுக்கே சொந்தமான குரல்…
உங்களுக்கே சொந்தமான வீராப்பு…
உங்களுக்கே சொந்தமான “ஈரம்”
ஈழமண்ணை மாகாவியமாக்கத் துடிக்கும்
இதயத் துடிப்பு…
இதயத்து ஒட்டுகின்றதுதான்…

வெள்ளி, 1 ஜனவரி, 2016

கவிதா சகி தருகிறேன் பதில்!

என்னால் ஏன் எழவியலாது
என
எடுத்தாண்ட எழுத்துக்களில்
எல்லாம் நீங்கள்
எழுமாற்றாக எழுதினீர்கள்
எழுந்துநிற்க ஏணியில் ஏறியோர்
எட்டியும் பார்க்காமைக்கு
என்னதான் நான்செய்யலாம்?
எனக்குள் பீனிக்ஸ் பறவை…
எழுந்துவருவேன் சாம்பரிலிருந்து
எட்டப்பர்கள் எத்தனை நாட்களுக்கு….

எனக்குள் உள்ள ஆளுமைகள்

வெள்ளி, 18 டிசம்பர், 2015

இரத்தம் கொடுப்பீர் !உயிர் காப்பீர்!

வாதங்கள் மறந்திடுவீர்
வீண் விதண்டாவாதம் செய்யாதிருப்பீர்!
பிரதேசவாதம் இல்லாதொழிப்பீர்
இயக்க நிலையும் இல்லாதொழிப்பீர்!
இரத்தம் கொடுப்பீர் - உம்
நல்லிரத்தம் கொடுப்பீர் உயிர் காப்பீர்!

உம்வாழ்வில் ஒளிபிறக்கும் மற்றான்
உம்வாழ்விற்காய் துஆ இரப்பான்
துளியேனும் இரத்தம் கொடுத்தே
பிறர் வாழ்வில் ஒளியேற்ற வழியாவீர்!

புதன், 14 அக்டோபர், 2015

நீயின்றி வேறில்லையே!

பனி விழுந்தாலும் வெண்டாமரை பாரமாகாதே
பூத்தான் பூத்தாலும் பனித்துளியில் மாற்ற மில்லையே
அருகில் இன்றி தூரே இருந்தாலும் மறவாதே
உன் அந்தச் சிறு இதயத்திற்குத் துன்பம் தரமுடியாதே

சிறைப்பட்ட சிந்தனைகளுக்கோ அளவே இல்லை
நாங்கள் மகிழ்வாய் இருந்த இடங்கள் மறப்பதே இல்லை
ஒருநாளும் போலின்று காதலில் எக்குறையும் இல்லை
என்னதான் கிடைத்தாலும் நீயின்றி ஏதுமில்லை...

சனி, 10 அக்டோபர், 2015

அட நரமாமிச உண்ணிகளே...

அட நரமாமிச உண்ணிகளே...
பெண்ணில்லா ஊரில் பிறந்த ஓநாய்களே...
அல்லாஹ் ஒருவன் என்ற
அசையாத நம்பிக்கையில் உள்ள
இஸ்லாமியரை
உன் ஈனச் செயல்களால்
இலகுவில் அழித்துவிட இயலாது...
உன் ரவைகள்
பலஸ்தீனிய முஸ்லிம்களை
சுஹதாக்கள் ஆக்குகின்றன...
அவர்களை சுவர்க்கத்தில்
உயரிய ஸ்தலத்தில் அமரச் செய்கின்றன...
நீ பெருஞ்சத்தத்துடன்
ஒரு பெண்ணைக் கொல்வதற்காய்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

என் வாழ்வின் மெழுகுவர்த்திகளை நினைத்துப் பார்க்கிறேன் சதா!

என் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஒளியேற்றியோரின் படங்களை பதிவிடுவதில் எனக்கு ஆத்மார்த்த மகிழ்வு....

எல்லோரும் என்வாழ்வில் ஒளியேற்ற முன், எல்லாம் வல்லாஹ் அல்லாஹ்வே என் வாழ்வில் ஒளியேற்றுகின்றான். அவனுக்கே என் நன்றிகள் எப்போதும் முதலாய்...

அதன் பின், நன்றி மறவாமை பொருட்டு பின்வருவோரை என்றும் நினைத்துப் பார்க்கின்றேன்....

நான் இன்று உண்டியும் உறையுளும் பெற்று சிறப்பாக இருக்க, எனக்கு பல்லாற்றானும் உதவி செய்த , மீள்மொழிவாளரும், சிறுகதை ஆசிரியருமான கலாபூசணம் திக்குவல்லை எம்.எம். ஸப்வான்,

திங்கள், 7 செப்டம்பர், 2015

ஏன் காதல் கூடாது? - கலைமகன் பைரூஸ்

------------------------------------
ஏன் காதல் கூடாது?
------------------------------------
ஏன் காதல் கூடாது…?
ஏன் காதல் கூடாது?
உன்னை ஏன் நீ காதலிக்க்க் கூடாது?
உன் மனதை ஏன் காதலிக்கக் கூடாது..?
உனக்கு மகிழ்வூட்டுவாரை ஏன் நீ
காதலிக்க்க் கூடாது?

அலக்காய்ப் பறந்தால் ஆலப்பறந்திடச் செயும் இளமை!

---------------------------------------------------------
அலக்காய்ப் பறந்தால்
ஆலப்பறந்திடச் செயும் இளமை!
---------------------------------------------------------
இம்சைகள் பலதந்து இதயத் தலைமோதி
இடுகாடு செலும்வரை வருமே அற்பம்
இம்சித்தவை கொஞ்சிச் சில கொண்டுகரம்
இளமையை கழிப்போம் இதமாக இளையோர்!

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பேருற்றேன் யான்!

----------------------------------
பேருற்றேன் யான்!
----------------------------------

புரட்டாதி முதலாந் தேதி யீதில்
புகழ்ந்திட யாருளர் நினைத் தேன்
உரமது தமிழின் காப்பியம் சீராய்
உவந் தளித்தோன் ஜின்னாஹ் தானே!

பெருங் காப்பியம் ஐந்தும் ஐவர்
புகழ் பெற தந்தார் புவியீதில் சீராய்
பெரும் புலவன் ஜின்னாஹ் தானும்
பெருமையாய்(த்) தந்தான் பன்னூல் தானே!

இனிது நான்கு!

-------------------------
இனிது நான்கு!
-------------------------
வாழ்க்கைக் கினிது இன்சொல் – உன்
வலிய ஆற்றலுக் கினிது பொறுமை
தெவ்வர் வீழ்ந்திட இனிது நேர்மை
தெளிந்த ஆறுதலுக் கினிது அமைதியே!
-------------------------
-கலைமகன் பைரூஸ்
09.01.2015 10.26

சனி, 29 ஆகஸ்ட், 2015

பைந்தமிழாள் என்னுள் வந்துவிடு நீ!

தமிழ்ச் சிந்து!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிந்துதே உள்ளத்து தேன் தமிழ்
சிந்தை தைக்குதே அன்புச் சரம்
உந்துதே மனமுந்துதே தமிழால்
சிந்தனை பலவாய் ஊறுதே ஈதில்!

சிந்தனை யென்னவோ சிந்து தமிழே
சிந்தனை மீதெனை ஏற்றினை நலமே
உந்தன் நினைவினில் ஆடினேன் நானே
உந்த னன்பினில் உனைச் சுவைப்பேன்!

பைந்தமிழாள் என்னுள் வந்துவிடு நீ!

தமிழ்ச் சிந்து!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிந்துதே உள்ளத்து தேன் தமிழ்
சிந்தை தைக்குதே அன்புச் சரம்
உந்துதே மனமுந்துதே தமிழால்
சிந்தனை பலவாய் ஊறுதே ஈதில்!

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

நயினை தந்த நல்லாசான் நாகேஸ்வரன்!

நயினை தந்த நல்லதோ ராசான்
நெஞ்சத் தினிக்கும் நற்றமி ழாசான்
நயமாய் நெஞ்சத் தமர்ந் திட்டாசான்
நாகேஸ்வரன்  சங்கத்தினி லென் னாசான்!

குணக் குன்றாய பேச்சினின் மறந்து
கிடைக்காத தேனோ அன்றென்று மனம்
துன்புற்றதே யெந்தன் ஐயாவை யுன்னி
தெளிந்தே னின்றேனும் ஆசானே யென்று!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

எனக்கு வாப்பா வேணும்!

உம்மா...
அப்பா... உம்மும்மா....
எங்க வாப்பா எங்க...?
நான் வாப்பாக்கிட்ட
போஹோனும்!

உம்மா...
ஏண்ட வாப்பா தங்கமானவரு
ஏண்ட வாப்பா இரக்கமானவரு
உம்மா
எனக்கு ஒண்டும் வேணாம் உம்மா
எனக்கு வாப்பா வோணும்
எனக்கு வாப்பா வோணும்!