எத்தனை எத்தனை சிகை அலங்காரம்!
குரங்கு கட், பாம்புக் கட், குடு கட் –
புதுமை பெயரால் பழியைக் கொண்டாடி,
படிப்பு மறந்தால் பயனென்ன சொல்?
முடி தான் மாணவன் மேன்மையின்முத்திரையா?
முடிச்சியால் அறிவு வளருமா?
சிந்தனை சீர் பெற கல்வி தான் தேவை,
சிகை அல்ல, சீரிய செயல் தான் பெருமை.
போக்கு வாட்டமாய் பாணி பின்தொடர்ந்தால்,
போக்கு தான் மாணவனின் பாதை தடுக்கும்.
காலம் கொஞ்சம் சென்ற பின்பு உணர்வாய்,
படிப்பே செல்வம்; பாணி வெறும் பொம்மை.
சிகை அலங்காரம் நாளை மறையும்,
அறிவு அலங்காரம் எந்நாளும் வாழும்.
குரங்கு கட் சிரிப்பைத் தரும் பின்,
கல்விக் கட் தாழ்வைத் தரும் உணர்க!
மாணவனே! கவனமாய் நடைபோடு,
பாசாங்கு பாணி வழி சென்றிடாதே.
படிப்பின் மேல் மனதைப் பதித்திடில்,
உன் வாழ்வு பசுமையாய் மலர்ந்திடும்.
- கலைமகன் பைரூஸ்