கதிரவ னெழுந்தான் கண்கள் கசக்கி
காரிரு ளவளை மெல்ல விலக்கி
பதியினி லெவரும் பாங்காய் நின்றிட
பாரினி லெங்கும் கதிர்கள் பரப்பி...
கனிச்சுவை தந்திடு தருக்களி லமர்ந்து
புள்ளுண்டு பறந்திட பிணைதனை கூறிட
பரிதி யெழுந்தனன் சுடர்தனை வீசி....
காலேய மெலாம் ஒன்று திரண்டு
பீலிக் கரையினி உண்டு மகிழ்ந்திட
பதியதுவீசி பாரினி லெழுந்தது கதிரே!
கலியொடு கலிதரு கலியினின் கரதம்
காண்பீ ரொற்றுமை என்று பகர்ந்திட
சலித்திடு மாந்தர் சோம்பல் நீக்கிட
சாகியம் பேசா வந்தன னருணன்!
எல்லாம் படைத்த வல்லா னருள்தெரி
என்று புகட்டிட ஏற்றமாய் எழுந்தனன்
சொல்லால் துதித்தனன் காடவிளக்கினை
சகத்தினுக் களித்தவ னருளைக் கண்டனன்!
இளிவிவர் என்பார் இத்தரை நோக்கிட
ஒளியினில் வந்தனன் சரணியம்தந்திட
ஒன்றே மாந்தர் என்றேவந்தன ருக்கனே!
-கலைமகன் பைரூஸ்
17.04.2013 8:25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக