It It கலைமகன் கவிதைகள்: கண்ணீர் துடைப்பார் ஆருளரோ? Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

புதன், 17 ஏப்ரல், 2013

கண்ணீர் துடைப்பார் ஆருளரோ?


உள்ளத்து வேதனைகள் தீப்பிழம்பாக
உயரிய சாதிக்கொடுமைகள் குழம்பாக
எள்ளளவும் மதியாதார் பாந்தளாக
ஏதுசெய்வம் எனவழிகிறது நீரருவி!

கருவினில் சுமப்பவள் அலைதுரும்பாகி
களங்கத்திற்குள் சிக்குண்ட மதியாகி
உருமுவாரின் வன்கொடுமைக் காளாகி
உயர்வுகாணுதற்காய் வழிகிறதுபேராறு!

சீதனத்து வயது தலையிடியாகி
சீர்வரிசை சேர்ப்பது எங்ஙனமென்றாகி
பேதைமனது புண்ணாகி - சீழாகி
பாராரின்றி வழிகிறது கண்ணீராகி....

மணஞ்செய்து மாதவத்தாளாகி அப்பால்
மணமிலாத இல்லத்தாளாகி - பின்னே
குணமேது மிலாதார் இவரலவா என்று
குந்தியிருக்க வருமே நடுங்கிடுநீர்!

சிசுவாகி மதலைதானாகி மடந்தையாய்
சிரசினிற் சுமந்திடும் மணவாட்டியாய்
பேசுபொருள் தானாகி பெரும்பொருளாகி
பரிதவிப்பாளின் விழிகள் ஓட்டுகின்றனநீர்!

பாராரின்றி பாருமின்றி பணமேதுமின்றி
பரிதவித்திட பாவையவள் துன்புற்றேங்க
வாராதோ குருதியென கண்ணீரருவி
வாங்குவளை கைகொடுப்பா ராருளரோ?

‘நோக்காடு யான்பட்டு நோக்குங்கால்
நொந்தழுவாள் முந்தானை விரிப்பாள்
எக்கேடு கெட்டாலென்ன’ என்றாயின்
எரிவாளிவள் கனல்நீர் அழித்திடும்பார்!

-கலைமகன் பைரூஸ்17/04/2013 2:36


கருத்துக்கள்:


பிரபோதம் நூலகம்
அருமை

கொஞ்சம் சிந்தித்தால்

 enakku kavithai theriyaathu aanaal kanneer thudaikka theriyum

தமிழன்பன் என்றும் புதியவன்


தங்களின் தமிழ் நடை மிகுந்த வியக்கும் வகையில் இருக்கிறது ... வாழ்த்துக்கள் நண்பரே !!

Kothandaraman Gopal
Arumai kavithai

இராஜபுத்திரன் கவிதைகள்
 கூடுவிட்டு கூடுபாய்ந்து எழுதும் வித்தை கற்றவர்களுள் தாங்களும் ஒருவர் அண்ணா

Loganadan PS
அருமை

Dhamu Sugi ·
தோழி!.... கவிதை புனைவதை விடாதீர்கள்... நம் வரலாற்றை நினைவு கூறுங்கள் ... கவிதை புனைந்த பாரதியைத்தான் ஆங்கிலேயன் தேடினானே ஒழிய கலவரம் செய்த சாமானியனை அல்ல எனவே தங்களின் கவிதைப் பணி மகத்தானது அதன் மூலம் நம் சொந்தங்களின் எழுச்சியை தூண்டுவதே நம் சொந்தங்களின் விடிவுக்கான மகாக்த்தான பனி.... தொடருங்கள்.... தயவு கூர்ந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக