It It கலைமகன் கவிதைகள்: மெய்யெழில் இதுவே! - கலைமகன் பைரூஸ் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

மெய்யெழில் இதுவே! - கலைமகன் பைரூஸ்



அன்பின்எழில் அழகின்எழில் அமுதின்எழில்
அகத்தினின் எழில் அரிவையின் எழில்
இன்னமுதின் எழில் இல்லறத்தின் எழில்
இங்குள இரவல் எழிலை விட விஞ்சிட்டெழில்...

படைப்பின்எழில் படைத்தவன்எழில் பாரினிலெழில்
பாவையர் பாலுளஎழில் பாவையரெனுமெழில்
விடமிலாதெழில் வாடாவெழில் வீறுடையெழில்
விண்ணின் மிளிர்ந்தெழில்தரும் நிலாப்பெண்ணே!

காரிருலெழில் ககனமீதெழில் காவியம்செய்யெழில்
காண்பார்  மெய்ம்மறந்திடவெழில் விண்ணெழில்
பூரிப்படையெழில் மின்னின்னெழில் ஈடாமோஎழில்
பூதலத்தெழிலெலாம் நிலாப்பெண்ணுக் கீடாமோ?

பட்டைதீட்டெழில் பாவையர்காதல்கொள்ளெழில்
பரவிடுமெழில் மின்னிடும்மெய்யெழில் போலுளதோ
சாட்டை காட்டிடுமெய்யொளி சந்திரவெழில்
சரமீது விழுந்திடு மெய்யெழில் மதியதெழிலே!

இரவல்எழிலே அல்ல அல்ல இஃதுமெய்யெழிலே
இறையின் மேன்மை யுணர்த்திடுமெழிலே யெழில்
பரவிடும் புவியினின் பாங்காம் எழிலேஎழில் -இஃது
படைத்தவன் மாண்புறு மெழிலே திங்கட்கதிரே!

-கலைமகன்  பைரூஸ்
16.03.2013 10:33

கருத்துரைகள்:
·     பிரபோதம் நூலகம் 
அருமையான வரிகள்

Razana Manaf 
இந்த கவிதையை வாசிக்கும் நேரம் எனக்கு இன்னுமொரு தமிழ் சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது. மெல்லிசை மன்னரின் இசைக்கு கண்ணதாசன் எழுதி பட்டினபிரவேசம் திரைப்படத்தில் ஒலிக்கும் ''வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா..'' என்கின்ற பாடல் அந்த பாடல் முடியும் வரை அதில் நிலா வந்துகொண்டே இருக்கும்.

Loganadan Ps

அழகு வரிகள். அருமை


Pena Manoharan
 ’இரவல் எழிலே அல்ல அல்ல இஃது மெய்யெழிலே...’மெய்ப்பொருள் 

காணும் உங்கள் தேடலில் தொடர்வேன் நான்  தோழனே.


Riza Fari 

கவிதை எழில் படைத்தவன் எழில் பாரினில் அழகே



Ehamparam Ravivarmah (Sub Editor: MetroNews) 

supeeer


Fasoon Mohamed

tanx sir


கவியன்பன் கலாம் 

எழிலான பாவில் என்னையே இழந்தேன்!

Sankar Mani Iyer

எங்கும் எழில்

எதிலும் எழில்

கருத்தில் எழில் 

காட்சியில் எழில் 

மண்ணில் எழில் 

விண்ணில் எழில்

புவியில் எழில்

கவியில் எழில் 

வானில் எழில்

நீரில் எழில் 

வெண்மை எழில் 

கருமை எழில் 

உயிரில் எழில்

மெய்யில் எழில் 

சொல்லில் எழில் 

பொருளில் எழில் 

பொங்கும் எழில்

தங்கும் எழில் 

அங்கும் எழில் 

இங்கு எழில் 

எங்கும் எழில் 

எதிலும் எழில் 

நன்றி நண்பனே 

கலை மகனே

Ilakkiya Sahi 

அழகான தமிழ் வார்த்தைகள் .அற்புதம்

Ks Sivakumaran

ELIL AI RASIPAVAN ENPATHUDAN UNGAL KAVITHAIYAYUM RASIKIREN.VAALKA.


Vetha ELangathilakam 

எழில் குமிழாக முகிழ்த்த வரிகள்

செழிப்புடைத்து!. பொழியட்டும்

பொழியட்டும் அவனி சிறக்க.

எழிலான வாழ்த்து.


Sharmila Dharmaseelan

அருமை..


தமிழன்பன் என்றும் புதியவன் 

அழகு தமிழ் நடை ... தொடர்க ... வாழ்த்துக்கள் நண்பரே !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக