It It கலைமகன் கவிதைகள்: நாளைய உலகின் தலைவர்கள் எவரோ? - கலேவல ஹபீலா ஜெலீல் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

வியாழன், 18 ஏப்ரல், 2013

நாளைய உலகின் தலைவர்கள் எவரோ? - கலேவல ஹபீலா ஜெலீல்

காலம் இணைத்த 
வரலாற்றுக் கோடுகளில் 
இன்னும்
இணைக்கப்படாமல் இருப்பது
எதிர்காலம்

அடுத்த தலைமுறையின்
கைகளில்
காலத்தின் தூரிகை
கிடைக்கப்பெற்றால்

ஒரு வேளை சிரிக்கும்
ஒரு வேளை மிதிக்கும்
மீறிப்போனால் நச்சரிக்கும்


காரணம்
சுதந்திரம் நாடி
மாயைக்குள்
மயங்கிக்கிடக்கும்
மங்கையர் கண்டு

மகப்பேற்றில்லாத
கண்ணகியின் மகளாய்
இருக்க வேண்டியவர்கள்
கன்னியரா ?
எனக் கேட்குமளவு
மிகைத்திட்டு
நாகரீகம்

மேலைத்தேய கலாச்சாரம்
மேலோங்க
அவர் தம் கலாச்சாரம்
புதைக்கப்படுகிறது

வாழ்வை தொலைத்த்துவிட்டு
இலட்சியத்தை புதைத்து விட்டு
சினிமா மோகத்தால்
சின்னாபின்னமாய் அலைகிறார்கள்

கச்சிதமாய் பொருந்தும்
ஆடையில்
கவர்ச்சிகள் வெளிப்பட
மன்மத லீலைகள்
தலை நிமிர ஆரம்பிக்கிறது

பலியிடப்படும் நாள்வரை
கழுத்தை இருக்கும்
கயிற்ரோடு
உல்லாச விடுதிகள்
களைகட்டுகிறது

நள்ளிரவில் கூட
ஊர் சுற்ற
அனுமதி கொடுக்கிறது
டீ னேஜ் தாண்டிய
தட்டச்சுப் பத்திரம்

வெளியில்
நெருப்புக் கங்குகளாய்
இருக்க வேண்டியவர்கள்
பூம்பனியாய்
தூவானமாய்

அந்தச் சாரலில்
தன்னை மறந்து
தன்னிச்சை தலைதூக்க
காளையர்

காமம்
மானிட மனதுக்குள்
முளையிட
அக்கிரமங்கள் ஏந்தி
புயல் வேகமாய்
புறப்படுகிறார்கள்

வேலியே பயிரையும்
மேய்ந்து
வெள்ளாட்டையும்
அடித்துத் தின்கிறது

பெற்றவளை
கூடப்பிறந்தவளை
மணந்தவளை
மறக்கிறான்
மாற்றாளை அடையத் துடிக்கிறான்

கவர்ச்சியில் காமத்தில்
கட்டுண்டு
புட்டி கையிலேந்தி
குட்டி தேடி அலைகிறான்

கனமொருமுறை
பாலியல் வன்முறை
செல்வாக்கு இருந்தால்
ஆர்ப்பாட்டமாகவும்

இல்லையெனில் ,,
உடலோடு நியாயமும்
அடக்கம் செய்யப் படுகிறது
நீதி ஊமையாகிறது

அடைகாக்கப்பட்ட
இருளுக்குள்
அடைக்கப்படுகிறது நியாயம்

உடம்புக் கூடுகளுக்கு
மேல்
ஆயுதச் சந்தைகள்
திறக்கப்படுகிறது

இறக்கை முறிந்த
காக்கையை
வாசல்களே வந்து
கொத்தித் தின்னுகிறது

இனக்கவர்ச்சியால்
தின்னப்பட்ட உடல்கள்
உயிரற்றுப் போகிறது முடிவில்

பதில் சொல்லிடுங்கள்

இப்படிப்பட்ட
இளைஜர் கையிலா
நாளைய சமூகம் ?

'இலக்கியா சகி'

கலேவல ஹபீலா ஜெலீல்
2013.04.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக