சித்திரையொன்று பிறந்திருக்கு
இத்தரையெங்கும் மலர்ந்திருக்கு
முத்திரையெனவே மகிழ்ந்திங்கு
மங்கலம் பொங்கிட நாமிணைவோம்! //
சித்திரை.....
முந்தை விதிகள் மாற்றிடுவோம்
மகிழ்ந்திட நாங்கள் ஒன்றிணைவோம்!
சித்திரை.....
பேதங்கள் இன்றே மறந்திடுவோம்
பேதைமை நீக்கி வாழ்ந்திடுவோம்
பாதைகள் புதுவகை செய்திடுவோம்
பயமிலா மாந்தராய் வாழ்ந்திடுவோம்
சித்திரை....
ஆறென அன்பை ஓட்டிடுவோம்
அழித்தலை யழித்து ஒன்றிடுவோம்
பேறென வெற்றிகள் பெற்றிடுவோம்
பேதையர் மானமும் காத்திடுவோம்!
சித்திரை.....
ஆக்கம் : கலைமகன் பைரூஸ்
2013.04.14 11:16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக