எங்கள் உயிர்கள் பறிக்கப்படுகையில்
எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகையில்
எங்கள் சிறுசுகளின் சிரசுகள் நசுங்குகையில்
நீயெல்லாம் எங்கே யிருந்தாய்....?
நீதியெல்லாம் எங்கேபோயின.....?
சூத்திரதாரிகள் யாரெனக் கண்டாயா?
சூட்சுமமாக உன்வெறியை
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக
எங்களில் திணித்தாய்...
எங்கள் இரத்தம் பேராறாக ஓடுகையில்
கைகொட்டி மத்தளம் அடித்தாய்...!
இரத்தம் உனக்கு தக்காளிப் பலரசமாய்...
நீயெல்லாம் எங்கே யிருந்தாய்....?
நீதியெல்லாம் எங்கேபோயின.....?
சூத்திரதாரிகள் யாரெனக் கண்டாயா?
சூட்சுமமாக உன்வெறியை
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக
எங்களில் திணித்தாய்...
எங்கள் இரத்தம் பேராறாக ஓடுகையில்
கைகொட்டி மத்தளம் அடித்தாய்...!
இரத்தம் உனக்கு தக்காளிப் பலரசமாய்...
இன்று
உன்னாட்டில்
உயிர்கள் பறிக்கப்படுகையில்
எத்தனை அலறல்கள் உன்னில்
செய்தவன் யாரோ....
எப்படிச் செய்தானோ....
துப்புத் துலக்குகிறாய்....
அநியாயமாய்
ஏதுமறியாதவனை
முஸ்லிம் என்ற காரணத்திற்காய்
கொன்று தொலைக்கிறாய்....
ஏ... நரமாமிச முண்ணியே,
உயிர்கள் பறிக்கப்படுகையில்
எத்தனை அலறல்கள் உன்னில்
செய்தவன் யாரோ....
எப்படிச் செய்தானோ....
துப்புத் துலக்குகிறாய்....
அநியாயமாய்
ஏதுமறியாதவனை
முஸ்லிம் என்ற காரணத்திற்காய்
கொன்று தொலைக்கிறாய்....
ஏ... நரமாமிச முண்ணியே,
இவர்கள் என்மைந்தர்கள்
இவர்கள் பாவமேதுமறியாதவர்கள்
என்று
தகப்பனொருவன் கண்கள்
இரத்தம்சிந்த
காணாதிருக்கின்றாய்....
என்று
தகப்பனொருவன் கண்கள்
இரத்தம்சிந்த
காணாதிருக்கின்றாய்....
இறைவனின்
கைவரிசை உங்களுக்கு
ஈதென்று காட்டவந்திருப்பதை
அறியாமல்
அபாபீல்கள் உன்னாட்டில்
அங்குமிங்கும் இருப்பதை
நீ உணராமல்
இன்னுமின்னும் காட்டுகிறாய்
உன்
அகங்காரத்தை
இறைவனின்
பீனிக்ஸ் பறவைகள்போல்வர்
முஸ்லிம்கள்...
சுடு சாம்பரிலும்
மீண்டெழுவர்
பிலால்களாய்.....
ஈதென்று காட்டவந்திருப்பதை
அறியாமல்
அபாபீல்கள் உன்னாட்டில்
அங்குமிங்கும் இருப்பதை
நீ உணராமல்
இன்னுமின்னும் காட்டுகிறாய்
உன்
அகங்காரத்தை
இறைவனின்
பீனிக்ஸ் பறவைகள்போல்வர்
முஸ்லிம்கள்...
சுடு சாம்பரிலும்
மீண்டெழுவர்
பிலால்களாய்.....
பலஸ்தீன மழித்தாய்!
ஈராக்கைத் துளைத்தாய்
ஜோர்தானில் உள்நுழைந்தாய்!
உன்னுடைய
நாஸ்திகத்தை
உன்னுடைய ஆடையில்லா
கலாசாரத்தை
எங்களுக்குள் நுழைக்க....
ஜோர்தானில் உள்நுழைந்தாய்!
உன்னுடைய
நாஸ்திகத்தை
உன்னுடைய ஆடையில்லா
கலாசாரத்தை
எங்களுக்குள் நுழைக்க....
அடப்பாவியே.. அமெரிக்காவே!
பார்... இந்தச் சிறுசுகளை
நீ உற்றுப்பார்....
அதே நேத்திரங்களோடு
உன் பிள்ளைகளையும் பார்....
அதே நேத்திரங்களோடு
உன் பிள்ளைகளையும் பார்....
அநியாய வழியில் பிறந்தவனே!
அடாவடித்தனம் செய்பவனே....
உனக்கு நாங்கள்
இலக்காரமா.......?
உனக்கு நாங்கள்
இலக்காரமா.......?
உன் ஆட்டங்கள்
அழிந்தொழிவதற்கு
காலம் நெருங்கிவிட்டது....
காலம் நெருங்கிவிட்டது....
உன் அடியாட்களையே
இறைவன்
உனக்கு எதிரான படையாய்
உன்மீது இறக்குவான்....!
உனக்கு எதிரான படையாய்
உன்மீது இறக்குவான்....!
நாங்கள் நம்புகிறோம்...
ஓரிறை இருப்பதால்....
நீ
தெய்வம் இல்லை என்பவன்
நீ தெய்வமோ?
உனக்குள் ஓராயிரம் முறை
உரத்துச் சொல்....
உனக்கும்
உன் அமெரிக்காவுக்கும்
உலகுக்கே கேட்கட்டும்....
உனக்குள் ஓராயிரம் முறை
உரத்துச் சொல்....
உனக்கும்
உன் அமெரிக்காவுக்கும்
உலகுக்கே கேட்கட்டும்....
ஏ சாத்தானிய வேதம் ஓதும்
மாமிருகமே....!
எத்தனை யெத்னை உயிர்கள்
எண்ணிப் பார்...
‘டோண்ட் வொரி’ உனக்கு
வாய்வந்த கலை.....
எத்தனை யெத்னை உயிர்கள்
எண்ணிப் பார்...
‘டோண்ட் வொரி’ உனக்கு
வாய்வந்த கலை.....
நிச்சயம்
எங்கள் ‘பதுவாக்கள்’
உங்களை ஆட்டிப்படைக்கும்
இறைவன் நேரானவழியை
காட்டுவான் எங்களுக்கு....
உனக்கும் காட்டுதற்காய்
பிரார்த்தனைகள்....
உங்களை ஆட்டிப்படைக்கும்
இறைவன் நேரானவழியை
காட்டுவான் எங்களுக்கு....
உனக்கும் காட்டுதற்காய்
பிரார்த்தனைகள்....
ஏ பிர்அவ்ன், நம்றூத்
ஹாமானே,
உங்கள் பெருமிதங்கள்
நிச்சயமாய் அழியும்
காலம் வெகுதூரமில்லை....
உங்கள் பெருமிதங்கள்
நிச்சயமாய் அழியும்
காலம் வெகுதூரமில்லை....
மனம் எனும் ஒன்றிருந்தால்
உன்னை நீ கேள்விகேட்கலாம்.../
மனமொன்று இருக்கிறதா?
மனமும் இல்லை மதமும் இல்லை
மானமும் இல்லாதவன் நீயடா
போடா.....
நீயும் உன் வல்லரசுத் தன்மையும்....
வல்லவன் இறைவனடா...
உன்னை நீ கேள்விகேட்கலாம்.../
மனமொன்று இருக்கிறதா?
மனமும் இல்லை மதமும் இல்லை
மானமும் இல்லாதவன் நீயடா
போடா.....
நீயும் உன் வல்லரசுத் தன்மையும்....
வல்லவன் இறைவனடா...
-கலைமகன் பைரூஸ்20/04/2013 11:56
கருத்துக்கள்:
Ramalan Deen:
///நீயும் உன் வல்லரசுத் தன்மையும்....
வல்லவன் இறைவனடா////////உண்மை
கவியன்பன் கலாம்:
ஆன்மாவை அழவைத்த வரிகள்- வலிகள்!
றாபியின் கிறுக்கல்கள்:
ஆக்ரோஷமான வரிகள். மனமும் இல்லை மதமும் இல்லை
மானமும் இல்லாதவன் நீயடா.... சூப்பர்.
Sabeenean Kisho:
இன்று முஸ்லிம் நாடுகளின் பிரச்சனனையை தீர்க்க அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்த ராணுவம் ஒன்றை உருவாக்குவதே சரியாக இருக்கும்.
ரிதரன் பிரித்திபா
likes this.
Sankar Mani Iyer:
வன்முறைக்கு
மதமேது
மனிதமேது
மதியும்தானேது?
நீ இந்துவோ
நீ இஸ்லாமியனோ
நீ கிருத்துவனோ
நீ சீக்கியனோ
நீ சமணனோ
வன்முறையில் இறங்கி
அப்பாவிகளை கொன்றால்
பெரும்பாவி நீயடா
நீயடா நீமட்டும்தானடா
பெரும்பாவி மட்டுமன்றி
கொடும்பாவியும் நீயடா நீயடா
நீமட்டும்தானடா
திருந்தடா திருந்தடா
அங்கிருக்கும் பிள்ளை
உன் பிள்ளை எனில்
உன் உயிர் துடிக்காதாடா
உன்மத்தனே
உள்ளடா உள்ளி
நில்லடா நிறுத்தடா
உய்யடா உய்யடா உய்
///நீயும் உன் வல்லரசுத் தன்மையும்....
வல்லவன் இறைவனடா////////உண்மை
கவியன்பன் கலாம்:
ஆன்மாவை அழவைத்த வரிகள்- வலிகள்!
றாபியின் கிறுக்கல்கள்:
ஆக்ரோஷமான வரிகள். மனமும் இல்லை மதமும் இல்லை
மானமும் இல்லாதவன் நீயடா.... சூப்பர்.
Sabeenean Kisho:
இன்று முஸ்லிம் நாடுகளின் பிரச்சனனையை தீர்க்க அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்த ராணுவம் ஒன்றை உருவாக்குவதே சரியாக இருக்கும்.
ரிதரன் பிரித்திபா
likes this.
Sankar Mani Iyer:
வன்முறைக்கு
மதமேது
மனிதமேது
மதியும்தானேது?
நீ இந்துவோ
நீ இஸ்லாமியனோ
நீ கிருத்துவனோ
நீ சீக்கியனோ
நீ சமணனோ
வன்முறையில் இறங்கி
அப்பாவிகளை கொன்றால்
பெரும்பாவி நீயடா
நீயடா நீமட்டும்தானடா
பெரும்பாவி மட்டுமன்றி
கொடும்பாவியும் நீயடா நீயடா
நீமட்டும்தானடா
திருந்தடா திருந்தடா
அங்கிருக்கும் பிள்ளை
உன் பிள்ளை எனில்
உன் உயிர் துடிக்காதாடா
உன்மத்தனே
உள்ளடா உள்ளி
நில்லடா நிறுத்தடா
உய்யடா உய்யடா உய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக