It It கலைமகன் ஆக்கங்கள்: 2026 Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 14 மார்ச், 2026

மத்திய கிழக்கின் மேகங்கள் | KALAIMAHAN FAIROOZ

பலஸ்தீன் நிலம் -

பண்டைய வரலாறின் கைரேகை பதிந்த மண்மேடு.
ஆனால் இன்று
அதன் மீது இரும்புக் காலடிகள் பதிக்கின்றன.

நிலம் பிடித்து
அடாவடி செய்த வரலாறு
ஒரு விகடகவி சொல்வதுபோல்
சிரிப்பாகத் தோன்றினாலும்
அதன் உள்ளே
கண்ணீரின் கடல் மறைந்திருக்கிறது.

யானை பூனையா?
என்று உலகம் ஒருநாள் கேட்கும்;

வெள்ளி, 6 மார்ச், 2026

உன் உதவி எனக்குள்! | இன்ன மஇய ரப்பீ!

'Inna Maiya Rabbi'

முன் கடல் கொந்தளித்தாலும்,
பின் எதிரி நெருங்கினாலும்,
மனித கண்கள் பயம் கண்டாலும்
இறைநம்பிக்கை தளராது.
ஒற்றைக் கணமும்

திங்கள், 23 பிப்ரவரி, 2026

விடியல் தேடும் கண்கள் | கலைமகன் பைரூஸ்

இமயத்து பனிக்குள் இமைக்காது நின்றான்;
இருளின் உள்ளே ஒளியொன்றைத் தேடினான்;
இன்று —
கையில் குர்ஆன்!
காலத்தின் கதவு திறப்பதா?
புகழ் ஒரு புயல்;
பேரரங்கு ஒரு அலை;
ஆனால் மெய்யுணர்வு —
அமைதியின் இடியாய்

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

தமிழே! நீ வாழ்க – தாய்மொழிப் பெருமை கூறும் புதிய கவிதை

தமிழ் — ஒரு மொழி அல்ல; ஓர் உயிர். ஓர் மரபு. ஒரு மெய்ப்பொருள்.

உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!” எனத் தொடங்கும் இந்தக் கவிதை, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மொழிப்பற்று நாதம். தாயின் துதிக்குரலாய் ஒலிக்கும் தமிழின் இனிமையையும், அதன் வரலாற்றுப் பெருமையையும், ஆன்மீக ஆழத்தையும், உலகளாவிய பரப்பையும் ஒரே பாவோசையில் இணைக்க முயன்ற, பன்னாட்டு / சர்வதேச தாய்மொழித்தினத்திற்கான சிறிய இலக்கிய அன்பளிப்பு இது. 

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தன்நம்பிக்கையின் சாயல்

தூரப் பாதை தூசியைத் தாங்கி
நம்பிக்கையை நெஞ்சில் நட்டுக் கொண்டு
“இன்று மாணவர்கள் நிரம்புவார்கள்” என
இதயம் முழுதும் கனவுகள் கட்டி
வகுப்பறை கதவைத் திறந்தார் ஆசிரியர்.
அங்கு இருந்தது
அமைதியும்…

சனி, 7 பிப்ரவரி, 2026

ஒரு விதவையின் ஏக்கம் | ஷியா

சின்னச் சின்ன வரிகளில் நிறையவே சிந்திக்க வைத்த அழகான கவி வரிகளைக் காணக் கிடைத்தது. நீங்களும் வாசித்துத்தான் பாருங்களேன். மெய்ப்பொருள் காண்பீர்கள்.

கவிதைக்குரியவர் க. ஷியா

-----------------------

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது

 “என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் ஆற்றல்களில் நான் உயர்ந்து நிற்கிறேன். இன்னுமின்னும் சாதிப்பேன்.”

இந்தத் தன்னம்பிக்கைச் சொற்களை வாழ்வியல் நெறியாகக் கொண்டு, நாடளாவிய ரீதியில் வரலாற்றுக் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றார் எனது மாணாக்கரில் ஒருவரும், தற்போது ஹம்பாந்தோட்டை – பதகிரிய முஸ்லிம்

திங்கள், 2 பிப்ரவரி, 2026

காதல் வலை

 காதல் வலை

காதல் என்று பெயரிட்ட
கனவுக் கயிற்றில் சிக்காதே மாணவனே,
கண நேர இனிமை காட்டி
காலமெங்கும் கட்டிப் போடும் வலை அது.

வியாழன், 29 ஜனவரி, 2026

Fairooz Tamil Font

Fairooz Tamil Font – இலவச பதிவிறக்கம் | கலைமகன் பைரூஸ்

தமிழ் மொழியின் எண்ம (டிஜிட்டல்) வளர்ச்சியில் எழுத்துருக்கள் (Fonts) மிக முக்கியமான பங்காற்றுகின்றன. அந்த வகையில், 1996 களில் கலைமகன் பைரூஸ் என்னால் உருவாக்கப்பட்ட “Fairooz” என்ற தமிழ் எழுத்துரு, நவீன

திங்கள், 26 ஜனவரி, 2026

நதியென உதவு | மெய்யன் நடராஜ்

இன்று, மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டெண்ணக் கூடியதாகவே உள்ளது. மரபுக் கவிதை எனும் பெயரில் அவர்களில் பெரும்பாலானோர் எழுதுகின்ற பாடல்களின் யாப்பு இருக்கின்றதா?எனக் கேட்டால் .... விடையாக வருவது இல்லை என்பதே. 

இலங்கை எழுத்தாளர்களில் மரபின்பால் ஈர்ப்புக் கொண்டு,காப்பியங்கள் படைத்தவர்களும் இல்லாமலில்லை. எனதாசான் 'காப்பியக்கோ' ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்கள் பல காப்பியங்களை தமிழ்கூரும் நல்லுலகிற்குத் தந்து, தனக்கென ஓரிடத்தை ஒதுக்கிக் கொண்டுள்ளார். 

சீரிய மரபின் பல்வேறு பாவமைப்புக்களில் கவிதை பாடுவோரில் ஒருசிலரின் கவிதைகள் என்னுள்ளத்தை தினமும் ஈர்க்கின்றன. 

சனி, 24 ஜனவரி, 2026

கலைமகன் பைரூஸ் – தமிழ் இலக்கியம், விருதுகள் மற்றும் படைப்புகள்

கலைமகன் பைரூஸ் – தமிழ் இலக்கியம், விருதுகள் மற்றும் படைப்புகள்

கலைமகன் பைரூஸ் தமிழ் இலக்கியம், கல்வி, மொழிபெயர்ப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படும் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார்.

🏆 விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

1993 தினகரில் என்னைப் பற்றி | கலைமகன் பைரூஸ்

 1993 இல் தினகரன் பத்திரிகையில், 'கலையுலகம்' பகுதியில் என்னைப் பற்றிய தகவல்...தினகரன் பத்திரிகையி்ல் 'கலையுலகம்' பக்கத்தில் தே. செந்தில்வேலவர் அவர்கள் அன்று பங்களித்திருந்தார். 

கட்டுரையில் இருந்த தகவல் - 

கலையுலகிற்கு ஒரு கலை
------------------------------------------
பொன்னீழத்தின் தென்னிலங்கையில் ஒரு நகரமாய் விளங்கும் வெலிகாமம் நகரத்தின் மேற்கே அமைந்துள்ள மதுராப்புர என்னும் கிராமந்தான் இந்தக் கலையின் பிறந்தகம்.