கண்களுக்குள்
மனக்கண்களுக்குள்
சுற்றிச்
சுழன்றாடும் கனாவே
உனக்கெனநான்
திறக்கின்றேன்
கதவுகளை…..
கனமான
இதயத்தால்
தரைமீது
உள்ளவர்கள்
தரங்கெட்டு
சாதித்துவம் பேசுவதை
அநியாயம்
செய்திடநான்
திறக்கின்றேன்
கனாக்;கதவுகளை….
பணம்
பணம் பணமே என்று
மனம்போன
போக்கிலே
பெரும்புள்ளியாய்
உள்ள
ஈனர்களின்
பணத்தைநான்
எளியவர்க்கு
பறித்துக்கொடுத்திட
திறக்கின்றேன்
கனவுக்கதவுகளை!
உறவுக்குப்
பாய்விரிக்க
உறவு
கைகாட்டிச் செல்ல
கைம்பெண்
பேரோடு நிற்கும்
தங்கைக்கு
மறுமணம் செய்துகொடுக்க
நாளும்
காண்கிறேன் கனாநான்…!
மெத்தெனவே
இளமை
மெருகோடு
வருங்காலை
மொழியின்றி
விழிபதுங்கி
சாத்வீக
மாப்பிள்ளைக்காய்
கனாக்காணும்
தங்கச்சிமாருக்கு
சீதனம்
வாங்கா மாப்பிள்ளைபிடிக்க
திறக்கின்றேன்
நான் கனாக்கதவுகளை!
இல்லாமைசொல்லி
இரந்துவரும்
பிச்சைக்கு
காலால்
உதைத்தேதள்ளும்
தரங்கெட்ட
புள்ளிகளை நான்
தரைமீது
தள்ளி ஏறிமிதிக்க
திறக்கின்றேன்
உனக்கென
கதவுகளை
மதிராகம்
இனிதாக
மனதெங்கும்
ஊடுருவ
மகிழ்விக்கும்
மணவாட்டி
காணாமல்
பல்லிளிக்கும்
பெண்ணுடனே
சரமாரியாய்
சங்கமிக்கும்
தரங்கெட்டவனைநான்
வாள்வீச்சினால்
வெட்டிச்சாய்க்க
திறக்கிறேன்
கனவுக் கதவுகளை!
கவிதையால்
கச்சிதமாய்
வித்தைகள்
காட்டி மதிமயக்கி
நேசிக்கும்
வனிதயரை
வலைவீசிப்பிடித்து
கழுத்தறுக்கும்
காமுகக்கவி
இவனென்று
முதுகினிலே
சுவரொட்டிசெய்து
இழுத்துச்
சென்றிடநான்
கனவுக்
கதவுகைளத் திறக்கின்றேன்…
பால்மனம்
மாறா பிஞ்சுகளை
கவளத்திற்குக்
கையேந்தும் உறவுகளை
வெட்டிச்
சாய்க்கும்
தீவைத்தே
சாய்க்கும்
தரங்கெட்ட
ஈனர்களை
நரகக்
குழியெனக் குழிபறித்து
அதனுள்ளே
தள்ளி
கைதட்டி
துள்ளிப்பாய்ந்து
மகிழ்ந்திருக்க
திறக்கின்றேன்
கனவுக் கதவுகளை!
திறந்திட்ட
கனவுக்கதவுகளில்
விழித்துக்
கொள்ளும் என்மனத்தின்
அலைகள்
பாய்ந்தே செல்லும்
நீண்டே
செல்லும் பேரலையாய்
அநியாயம்
செய்வோரை
பூமியிலிருந்து
கிள்ளியெறிய…
- கலைமகன் பைரூஸ்
நன்றி - இலண்டன் தமிழ் வானொலி (02.08.2012 வியாழன் கவிதை நேரம்)
==கருத்துரைகள்==
Nizam Farook
Arumaiyaana kanavukal valththukkal kanavana kanavukal
'மல்லியப்பு சந்தி' திலகர்
நியாயமான கோபங்கள்...கனவுகளாக... மெய்ப்படவேண்டும். வாழ்த்துக்கள்
Rajakavi Rahil
Rajakavi Rahil
==கருத்துரைகள்==
Nizam Farook
Arumaiyaana kanavukal valththukkal kanavana kanavukal
'மல்லியப்பு சந்தி' திலகர்
நியாயமான கோபங்கள்...கனவுகளாக... மெய்ப்படவேண்டும். வாழ்த்துக்கள்
Rajakavi Rahil
கனவுக் கதவுகள்
மிக எளிமையாகத் திறக்கும்
வலிய மனங்களையும் !
சமூகத்தின் மீதான கோபம் புலவனுக்கு அழகு .
சமூகத்தின் மீதான கோபம் புலவனுக்கு அழகு .
அந்த அழகிய சிவப்புப் பார்வை
கவிதையை தூக்கி நிறுத்துகிறது .
உங்கள் சொல் அமைப்பு பிரமாதம்
இன்னும் கருத்துச் செறிவு அடடா !
பிரச்சினையை மிக அழகாகச் சொல்கின்ற நீங்கள்
ஒரு தீர்வும் முன் வைத்தால்
இன்னும் இன்னும் கவிதை நிலைக்க வாய்ப்பு இருக்கும் .
எல்லாவரிகளும் சிறப்பாக இருக்கின்றன .

உங்களைப் போன்று எழுதுகிறவர்கள் மிக மிகக் குறைவு.
உங்கள் கவிதைகளை நான் மிகவும் விரும்பிப் படிப்பவன்
அடிப்படையில் நானும் மரபு வாதிதான் . இதைச் சொல்வதில் பெருமை எனக்கு..
நான் எவ்வளவுதான் புதுக்கவிதைகள் எழுதினாலும்
நான் நேசிப்பது மரபைத்தான்.
உங்கள் கவிதைகளை நூலாகப் பார்க்கும் ஆசை எனக்கு உண்டு. .
Shanthini Rasathy
உங்கள் தமிழும் கவியும் வெகுதூரம் போகும்...நியாயமான கனவு ..எல்லோருக்கும் வரவேண்டியது ...சமூக அநியாயங்கள் கனவிலாவது கழுத்து சீவுப்படட்டும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக