நல்ல பிள்ளைபோல நாளும் வளரணும்
நாளும் நல்லபெயர் வாங்கி வாழணும்
செல்லமாக எவருடனும் சேர்ந்து பழகணும்
சொந்தக் காலில் என்றைக்கும் நிற்க முயலணும்!
உண்மையை வையமெங்கும் நீபேசணும்
உயர்நற்குணங்களுடன் என்றும் நீவாழணும்
நன்மைசெய்து பிறர்மதிக்க நீவாழணும்
நாளும் பெற்றவரைப் போற்றி வாழணும்!
இறைவனை என்றும் தொழுது மகிழணும்
இதழில் என்றைக்கும் இனியன பேசணும்
மறைவழியையே மார்க்கமாய்க் கொள்ளணும் நீ
மண்ணி லுள்ளவரை மடைமை அழிக்கணும்!
பேதைமைக் குணம் நீக்கி வாழணும் - நீ
பேதையர் மானமும் காத்து வாழணும்
சாதியறைவானைச் சாடி வாழணும் - அவன்
சரித்திரத்தைச் சகதியிலே வீசியெறியணும்!
மனிதத்தை என்றும் புனிதமாய்ப் பார்க்கணும்
மனிதமிலா மாக்களை குத்தி யுதைக்கணும்
புனிதனாய் நீயிருக்க அற்றாரைச் சேரணும்
புவியினில் கயிராயிருக்க வழிநீசெய்யணும்!
வாடுகின்ற பாட்டாளி வழிகாணச் செய்யணும்
வான்முட்டும் மாளிகைகள் நிலைகேட்கணும்
அடிதொட்டு வணங்குநிலை அறவே மாறணும்
அகிலமெங்கும் நல்லவை உரக்கச் சொல்லணும்!
கேட்டிடவே திசையெட்டும் அண்டமெல்லாம்
கருத்தாய நன்மொழிகள் இவன்சொல்வானென
கேட்டிடவே உளம்தான் விரும்புதையா - நீ
கூன்பட்டுக் குனிந்தாலும் நலமே செய்வாய்
குவலயத்து வாழும் அது வீழ்வதில்லையே!
-கலைமகன் பைரூஸ்
நன்றி
தினகரன் வாரமஞ்சரி
எழுத்து
இலண்டன் வானொலி (வியாழன் கவிதை நேரம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக