It It கலைமகன் கவிதைகள்: ஏன் கவி எழுதுகிறேன்…? Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஏன் கவி எழுதுகிறேன்…?


ஏன்கவி எழுதுகிறாய் எனக்கேட்டவன்கு
ஏன்நான் கவியெழுதுகிறேன் என்றேன்பா
குன்றுபோல் நிமிர்ந்து நாளும்நிற்கும்
குவலயத்துத் தமிழ்ப்பற்றுப்பாவென்றேன்நான்
அன்னைதாதை பெருமை யுரைத்திட
அணைகடந்தேவரும் நற்றமிழில்நான்
இன்மணம் கமழ்ந்திட இதயம்நகைக்க
இனிதெனக் கவிபுனைகிறேன் என்றேன்பார்!

வலியார்முன்சென்று புயத்துசால்வைமாட்டி

வலியொடு கூனிக்குறுகி பாரைநோக்கும்
இல்லாரின் துன்பம் பாரிற்கோதிட நான்
இயன்று விழிநீர்கசிய கவியெழுதுகிறேன்
கிலியெதற்கு நாமெலாம் பாரிலொன்றே
கிள்ளியெறிக மடைமை யும்மில்என்று
புலிபோலும் சீறியெழுந்து என்னவர்க்காய்
பதட்டமின்றி யெழுதுகிறேன் நான்கவியே!

கோடிகள் கோடாய் வைத்துறங்கி

கருத்தோடு வருவார்க்கு பத்துகள்ஈந்து
பாடிடும் புள்ளிகளின் வாய்க்குமிளகீய
பைந்தமிழில் நானும் எழுதுகிறேன்
நாடிபிடித்து மெய்நோக்கி என்றமிழில்!
நலமாகத்தான் என்கிறார் கவிபார்த்து
ஆடிப்போய் அவர்கூற்றில் மயங்கி
ஆட்டங்காண் கவிதை செயவிலைநான்!

ஏன்கவிதை எழுதுகிறாய்நீ கேட்டிடும்

எடுப்பான கேள்விக்கு விடைசொல்வேன்!
ஊனின்றி வித்தைபால் காதலுற்று
ஊரெங்கும் கல்விப்பாலுக்காய் கையேந்தும்
என்னிரத்தங்கள் வடித்திடும் கண்ணீர்க்காய்
எழுதுகிறேன் மேடைதுடித்திடப் பேசிடும்
ஏற்றமிலா மாக்களை கொடுநகஎழுத்தால்கீறி
எட்டப்பன்நீயடா என்றிட எழுதுகிறேன்கவிநான்!

நாற்குண முனக்கேயுரித்து பதுங்குநீயென்று

நற்குணத்தொடுள நங்கையை கசக்கிப்பிழிந்து
பொற்பாதம் இவளதென்று பரத்தைநாடும்
பேடிகளின் கொட்டம்நீக்கிடத்தான் எழுதுகிறேன்
சுற்றமும் முற்றமும் போற்றுதற்காய் அல்லவே
சூழ்ந்துமாலை வருதற்கும் சால்வைசாத்துதற்கும்
குற்றம்காண் கவியெழுதேன் நான்காண்
குன்றிட்ட தீபமாய் எம்மவர்காண எழுதுகிறேன்!

பணமாலை புகழ்மாலை பெறுதற்கு

பைந்தமிழை கெட்டொழியேன்நான்
ஈனர்கள் செயல்கடிந்து இதமானநற்றமிழில்
இச்சைதரும் மெய்யீவேன் நாம்வாழ
குணத்தொடு என்றும் எம்மவர்நின்றிட
கனமிலா தாய்த்தமிழில் எனதானகவிவழியில்
பணத்தொடு மனிதம் பார்க்காமாந்தர்தம்
பைத்தியம் நீக்கிட கவியெழுதுகிறேன்நான்!

இல்முன்குந்தியே நின்றிடும் சோதரிகள்

இல்வருவான் எப்போ எனஏங்க தெரு
இல்முன்நின்று குலைக்கும் தரங்கெட்டார்
இரத்தம்வருங்கால் கழுத்துநெறுக்கிட
சொல்லெடுத்து உரைப்பாய் கவியெழுத
சொல்வாரிவனோ என்று? நகைப்பெனக்கு
சொல்க ஏன் எழுதுகிறாய் கவியென்பான்கு
சொரியாமல் முதுகு சொன்னேன்பாஇது!

மரபுமிலை புதுவதுமிலை உன்கவியில்

மரமண்டை யெழுதுகிறாய் ஏன்தான்?
கூரறிவாய் உரைப்பதாய் வைபவன்க்கு
நான் ஏன்எழுதுகிறேன் கவிசொன்னேன்பா!
பெரிதாகக் கவிபுனைய கூத்தனுமல்லன் 
பொரிதந்த நற்கவிஞன் காளமேகமுமல்லன்
ஏறிவருகின்ற சொல்லெடுத்து எனக்கான
என்றமிழில் சொல்வேன்கவி ஏன்என்பான்க்கு!

ஏனென்ற வினாதொடுத்து விடையுங்கண்டு

ஏதிலார் நெஞ்சத்தோடு வினாதொடுக்க
பன்னூறு கவிதரலாம் நலமாக நிலம்வாழ
பைந்தமிழின் வீசுபுகழ் தரணியோத
சொன்னேன் யான் இக்கவியில்பண்பொடு
சொலும் கவியெலாம் எனதானபாணியிதே!
கூன்நிமிர வழிசெய்வோம் நம்மவர்தம்
குழந்தைமனம் இன்புறவே ஏதும்செய்வாம்!

-
கலைமகன் பைரூஸ் 

நன்றி -

இலண்டன் தமிழ் வானொலி - வியாழன் கவிதை நேரம்
மெட்ரோ நிவ்ஸ் METRO NEWS FRIDAY EDITION 2012/09/07

1 கருத்து:

  1. அன்புள்ள கலைமகன் பைரூஸ் அவர்களுக்கு,

    சொன்னேன் யான் இக்கவியில்பண்பொடு
    சொலும் கவியெலாம் எனதானபாணியிதே!

    கூன்நிமிர வழிசெய்வோம் நம்மவர்தம்
    குழந்தைமனம் இன்புறவே ஏதும்செய்வாம்! என்று எளிமையாய் அடக்கமுடன் கூறிவிட்டிர்கள். வாழ்த்துகள்.

    My fair lady ல் Prof Higgins சொல்வார் 'I am an ordinary man' என்று.

    அதையே ஆதாரமாய் வைத்து நான் எழுதிய கவிதை!

    நானும் கவிதை எழுதுகிறேன்

    நான்,
    கவிஞர் கண்ணதாசன் இல்லை;
    நான் ஒரு சாதாரண மனிதன், ஆனால்
    நானும் கவிதை எழுதுகிறேன்!

    தனி அறையில் அமர்ந்து சிந்திக்க ...நேரமில்லை,
    என் சிந்தனைகள் சிறகடித்துப் ...பறக்கவில்லை;
    நான் ஒரு சாதாரண மனிதன், ஆனால்
    நானும் கவிதை எழுதுகிறேன்!

    விடுதி அறையில் தங்கவில்லை,
    வேதனையில் கவிதை எழவில்லை;
    மதுபானமும் அருந்தவில்லை,
    மப்பில் கவிதை எழுதவில்லை!

    காதல் கவிதை எழுதுகிறேன்,
    வாழ்க்கை கவிதை எழுதுகிறேன்;
    நண்பர்கள் கவிதை எழுதுகிறேன்,
    பிற பல கவிதைகளும் எழுதுகிறேன்!

    நான்,
    கவிஞர் கண்ணதாசன் இல்லை;
    நான் ஒரு சாதாரண மனிதன், ஆனால்
    நானும் கவிதை எழுதுகிறேன்!

    அன்புடன்,
    வ.க.கன்னியப்பன்
    கண் மருத்துவப் பேராசிரியர் (பணி நிறைவு)மதுரை 18


    பதிலளிநீக்கு