It It கலைமகன் கவிதைகள்: ஏப்ரல் 2013 Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஏ சதிகார அமெரிக்கனே...! - கலைமகன் பைரூஸ்


எங்கள் உயிர்கள் பறிக்கப்படுகையில்
எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகையில்
எங்கள் சிறுசுகளின் சிரசுகள் நசுங்குகையில்
நீயெல்லாம் எங்கே யிருந்தாய்....?
நீதியெல்லாம் எங்கேபோயின.....?
சூத்திரதாரிகள் யாரெனக் கண்டாயா?
சூட்சுமமாக உன்வெறியை
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக
எங்களில் திணித்தாய்...
எங்கள் இரத்தம் பேராறாக ஓடுகையில்
கைகொட்டி மத்தளம் அடித்தாய்...!
இரத்தம் உனக்கு தக்காளிப் பலரசமாய்...



வியாழன், 18 ஏப்ரல், 2013

நாளைய உலகின் தலைவர்கள் எவரோ? - கலேவல ஹபீலா ஜெலீல்

காலம் இணைத்த 
வரலாற்றுக் கோடுகளில் 
இன்னும்
இணைக்கப்படாமல் இருப்பது
எதிர்காலம்

அடுத்த தலைமுறையின்
கைகளில்
காலத்தின் தூரிகை
கிடைக்கப்பெற்றால்

ஒரு வேளை சிரிக்கும்
ஒரு வேளை மிதிக்கும்
மீறிப்போனால் நச்சரிக்கும்

புதன், 17 ஏப்ரல், 2013

கண்ணீர் துடைப்பார் ஆருளரோ?


உள்ளத்து வேதனைகள் தீப்பிழம்பாக
உயரிய சாதிக்கொடுமைகள் குழம்பாக
எள்ளளவும் மதியாதார் பாந்தளாக
ஏதுசெய்வம் எனவழிகிறது நீரருவி!

கருவினில் சுமப்பவள் அலைதுரும்பாகி
களங்கத்திற்குள் சிக்குண்ட மதியாகி
உருமுவாரின் வன்கொடுமைக் காளாகி
உயர்வுகாணுதற்காய் வழிகிறதுபேராறு!

ஒன்றே மாந்தர் என்றிட எழுந்தனன்! - கலைமகன் பைரூஸ்


கதிரவ னெழுந்தான் கண்கள் கசக்கி
காரிரு ளவளை மெல்ல விலக்கி
பதியினி லெவரும் பாங்காய் நின்றிட
பாரினி லெங்கும் கதிர்கள் பரப்பி...

 கள்ளுண்டு திரண்டிட தும்பிக ளெழுந்து
கனிச்சுவை தந்திடு தருக்களி லமர்ந்து
புள்ளுண்டு பறந்திட பிணைதனை கூறிட
பரிதி யெழுந்தனன் சுடர்தனை வீசி....

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

மெய்யெழில் இதுவே! - கலைமகன் பைரூஸ்



அன்பின்எழில் அழகின்எழில் அமுதின்எழில்
அகத்தினின் எழில் அரிவையின் எழில்
இன்னமுதின் எழில் இல்லறத்தின் எழில்
இங்குள இரவல் எழிலை விட விஞ்சிட்டெழில்...

படைப்பின்எழில் படைத்தவன்எழில் பாரினிலெழில்
பாவையர் பாலுளஎழில் பாவையரெனுமெழில்
விடமிலாதெழில் வாடாவெழில் வீறுடையெழில்
விண்ணின் மிளிர்ந்தெழில்தரும் நிலாப்பெண்ணே!

திங்கள், 15 ஏப்ரல், 2013

எங்கே மனிதம்....? - கலைமகன் பைரூஸ்



தன் பிரபல்யத்துக்காய்
மனிதம் விற்கப்படுகிறது....
தன் மகிழ்ச்சிக்காய்
பிறர் அழுகுரல்
வீணையென இரசிக்கப்படுகிறது...

பிணந்தின்னிக் கழுகளும்
ஊளையிடும் நரிகளும்
நிறைந்த சாக்காட்டில்
புதுமையைக் காண்பதற்காய்
‘செல்’கையில்


ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

சித்திரையொன்று பிறந்திருக்கு...! -கலைமகன் பைரூஸ்



சித்திரையொன்று பிறந்திருக்கு
இத்தரையெங்கும் மலர்ந்திருக்கு
முத்திரையெனவே மகிழ்ந்திங்கு
மங்கலம் பொங்கிட நாமிணைவோம்! //

சித்திரை.....


சனி, 13 ஏப்ரல், 2013

எல்லாம் நிலையிலாதனவே! - கலைமகன் பைரூஸ்

நிலையிலா வாழ்வு பற்றிக் கற்றிட
நிலையிலா வையம் பற்றிக் கண்டிட
இலைநீரே அழகாய் வந்தனைநீ - போழ்தில்
இறங்கிவிடுவாய் என்பதறி சீராய் நீ!