It It கலைமகன் கவிதைகள்: 2015 Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

வெள்ளி, 18 டிசம்பர், 2015

இரத்தம் கொடுப்பீர் !உயிர் காப்பீர்!

வாதங்கள் மறந்திடுவீர்
வீண் விதண்டாவாதம் செய்யாதிருப்பீர்!
பிரதேசவாதம் இல்லாதொழிப்பீர்
இயக்க நிலையும் இல்லாதொழிப்பீர்!
இரத்தம் கொடுப்பீர் - உம்
நல்லிரத்தம் கொடுப்பீர் உயிர் காப்பீர்!

உம்வாழ்வில் ஒளிபிறக்கும் மற்றான்
உம்வாழ்விற்காய் துஆ இரப்பான்
துளியேனும் இரத்தம் கொடுத்தே
பிறர் வாழ்வில் ஒளியேற்ற வழியாவீர்!

புதன், 14 அக்டோபர், 2015

நீயின்றி வேறில்லையே!

பனி விழுந்தாலும் வெண்டாமரை பாரமாகாதே
பூத்தான் பூத்தாலும் பனித்துளியில் மாற்ற மில்லையே
அருகில் இன்றி தூரே இருந்தாலும் மறவாதே
உன் அந்தச் சிறு இதயத்திற்குத் துன்பம் தரமுடியாதே

சிறைப்பட்ட சிந்தனைகளுக்கோ அளவே இல்லை
நாங்கள் மகிழ்வாய் இருந்த இடங்கள் மறப்பதே இல்லை
ஒருநாளும் போலின்று காதலில் எக்குறையும் இல்லை
என்னதான் கிடைத்தாலும் நீயின்றி ஏதுமில்லை...

சனி, 10 அக்டோபர், 2015

அட நரமாமிச உண்ணிகளே...

அட நரமாமிச உண்ணிகளே...
பெண்ணில்லா ஊரில் பிறந்த ஓநாய்களே...
அல்லாஹ் ஒருவன் என்ற
அசையாத நம்பிக்கையில் உள்ள
இஸ்லாமியரை
உன் ஈனச் செயல்களால்
இலகுவில் அழித்துவிட இயலாது...
உன் ரவைகள்
பலஸ்தீனிய முஸ்லிம்களை
சுஹதாக்கள் ஆக்குகின்றன...
அவர்களை சுவர்க்கத்தில்
உயரிய ஸ்தலத்தில் அமரச் செய்கின்றன...
நீ பெருஞ்சத்தத்துடன்
ஒரு பெண்ணைக் கொல்வதற்காய்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

என் வாழ்வின் மெழுகுவர்த்திகளை நினைத்துப் பார்க்கிறேன் சதா!

என் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஒளியேற்றியோரின் படங்களை பதிவிடுவதில் எனக்கு ஆத்மார்த்த மகிழ்வு....

எல்லோரும் என்வாழ்வில் ஒளியேற்ற முன், எல்லாம் வல்லாஹ் அல்லாஹ்வே என் வாழ்வில் ஒளியேற்றுகின்றான். அவனுக்கே என் நன்றிகள் எப்போதும் முதலாய்...

அதன் பின், நன்றி மறவாமை பொருட்டு பின்வருவோரை என்றும் நினைத்துப் பார்க்கின்றேன்....

நான் இன்று உண்டியும் உறையுளும் பெற்று சிறப்பாக இருக்க, எனக்கு பல்லாற்றானும் உதவி செய்த , மீள்மொழிவாளரும், சிறுகதை ஆசிரியருமான கலாபூசணம் திக்குவல்லை எம்.எம். ஸப்வான்,

திங்கள், 7 செப்டம்பர், 2015

ஏன் காதல் கூடாது? - கலைமகன் பைரூஸ்

------------------------------------
ஏன் காதல் கூடாது?
------------------------------------
ஏன் காதல் கூடாது…?
ஏன் காதல் கூடாது?
உன்னை ஏன் நீ காதலிக்க்க் கூடாது?
உன் மனதை ஏன் காதலிக்கக் கூடாது..?
உனக்கு மகிழ்வூட்டுவாரை ஏன் நீ
காதலிக்க்க் கூடாது?

அலக்காய்ப் பறந்தால் ஆலப்பறந்திடச் செயும் இளமை!

---------------------------------------------------------
அலக்காய்ப் பறந்தால்
ஆலப்பறந்திடச் செயும் இளமை!
---------------------------------------------------------
இம்சைகள் பலதந்து இதயத் தலைமோதி
இடுகாடு செலும்வரை வருமே அற்பம்
இம்சித்தவை கொஞ்சிச் சில கொண்டுகரம்
இளமையை கழிப்போம் இதமாக இளையோர்!

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பேருற்றேன் யான்!

----------------------------------
பேருற்றேன் யான்!
----------------------------------

புரட்டாதி முதலாந் தேதி யீதில்
புகழ்ந்திட யாருளர் நினைத் தேன்
உரமது தமிழின் காப்பியம் சீராய்
உவந் தளித்தோன் ஜின்னாஹ் தானே!

பெருங் காப்பியம் ஐந்தும் ஐவர்
புகழ் பெற தந்தார் புவியீதில் சீராய்
பெரும் புலவன் ஜின்னாஹ் தானும்
பெருமையாய்(த்) தந்தான் பன்னூல் தானே!

இனிது நான்கு!

-------------------------
இனிது நான்கு!
-------------------------
வாழ்க்கைக் கினிது இன்சொல் – உன்
வலிய ஆற்றலுக் கினிது பொறுமை
தெவ்வர் வீழ்ந்திட இனிது நேர்மை
தெளிந்த ஆறுதலுக் கினிது அமைதியே!
-------------------------
-கலைமகன் பைரூஸ்
09.01.2015 10.26

சனி, 29 ஆகஸ்ட், 2015

பைந்தமிழாள் என்னுள் வந்துவிடு நீ!

தமிழ்ச் சிந்து!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிந்துதே உள்ளத்து தேன் தமிழ்
சிந்தை தைக்குதே அன்புச் சரம்
உந்துதே மனமுந்துதே தமிழால்
சிந்தனை பலவாய் ஊறுதே ஈதில்!

சிந்தனை யென்னவோ சிந்து தமிழே
சிந்தனை மீதெனை ஏற்றினை நலமே
உந்தன் நினைவினில் ஆடினேன் நானே
உந்த னன்பினில் உனைச் சுவைப்பேன்!

பைந்தமிழாள் என்னுள் வந்துவிடு நீ!

தமிழ்ச் சிந்து!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிந்துதே உள்ளத்து தேன் தமிழ்
சிந்தை தைக்குதே அன்புச் சரம்
உந்துதே மனமுந்துதே தமிழால்
சிந்தனை பலவாய் ஊறுதே ஈதில்!

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

நயினை தந்த நல்லாசான் நாகேஸ்வரன்!

நயினை தந்த நல்லதோ ராசான்
நெஞ்சத் தினிக்கும் நற்றமி ழாசான்
நயமாய் நெஞ்சத் தமர்ந் திட்டாசான்
நாகேஸ்வரன்  சங்கத்தினி லென் னாசான்!

குணக் குன்றாய பேச்சினின் மறந்து
கிடைக்காத தேனோ அன்றென்று மனம்
துன்புற்றதே யெந்தன் ஐயாவை யுன்னி
தெளிந்தே னின்றேனும் ஆசானே யென்று!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

எனக்கு வாப்பா வேணும்!

உம்மா...
அப்பா... உம்மும்மா....
எங்க வாப்பா எங்க...?
நான் வாப்பாக்கிட்ட
போஹோனும்!

உம்மா...
ஏண்ட வாப்பா தங்கமானவரு
ஏண்ட வாப்பா இரக்கமானவரு
உம்மா
எனக்கு ஒண்டும் வேணாம் உம்மா
எனக்கு வாப்பா வோணும்
எனக்கு வாப்பா வோணும்!

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

தூயமனத்தார்க் களிப்பீர் வாக்கு!


ஆனைதருவேன் பூனை தருவேன் என்று
அடுக்கடுக்காய் தந்த பொய்ப் பொத்தல்கள்
ஆனையளவும் நாளை புலர்ந்திட அருகாகி
அச்சத்தால் விம்மிப் புடைக்கும் உண்டி!
வெறும் வாய்க்கு வெற்றிலை கெட்டவரும்
வெறும் வாய்க்கே சொன்ன பொய்களெலாம்
வெறுக்கும் நாள் புலர்ந்திட பீதியுற்றவர்
வெட்கிக் குனிந்திட நாளைவருது தேர்தல்!
அழகு மயில்களாட வான்கோழி யன்னார்
ஆட்டிய ஆட்டங்கள் ஆட்டம் கண்டிடவே
விழலுக்கிரைத்த நீரென போய்விட நாளை
விடியலில் விரல்கள் பூசிடும் ஊதாமை!

சனி, 30 மே, 2015

கடிகாரக் கதறல்!

  
“இயக்கங்களுக்காய்
சாதியத்திற்காய்
பெண்ணியத்திற்காய்
தனத்திற்காய்
வானளாவ குரல்கொடுக்கும்
கையாலாகாதவர்களே...!
ஒவ்வொரு விநாடியும்
பர்மிய
இஸ்லாமிய
குழந்தை மலர்கள்

வெள்ளி, 1 மே, 2015

​மேதினியில் மேலெழுவோம்! - கலைமகன் பைரூஸ்


சிங்க ஏறுகள் எலிகளை நசுக்கி

சிம்மாசனத்தில் அமர்ந்து
பூனைகளின் கால்களால் நசுங்குவதை
வேடிக்கை பார்க்கின்றன இன்றும்...

முற்று முழுதாய் நசுக்குவதையே
மேதினியில் பெரும்பேறாய்க் கொண்டு
மேதினம் வேறு கொண்டவதில்
மும்முரமாய் நிற்பவனும் ஏறுகள்தாம்!

வெள்ளி, 6 மார்ச், 2015

விழா நூற்றாண்டும் கண்டிடு பத்ரே!

நீள்தெங்குகள் உயர்ந்தோங்குகின்ற
நல்லூர் வெலிகம பதிதனிலே
நின்று நல்லன பலவியற்றும்
நல்லறிவகம் பதுர் அஹதியாவே!
நிறைவாம் பணிகள் பலவியற்றி
நிறைவாய் காணுது வெள்ளிவிழாவே!

சனி, 14 பிப்ரவரி, 2015

கலைமகனின் தனிப்பாடல்கள்

சந்த வசந்தத்திற்காக எழுதுகின்ற தனிப்பாடல்கள் இங்கு இடம்பெறும். கவிதைகள் கண்டு தட்டிக் கொடுப்பது - பிழைகளை இதமாகத் தட்டித் தர வேண்டியது சான்றோர் கடமை.

புதன், 4 பிப்ரவரி, 2015

எமதிலங்கை என்று பாடுவோமே!


ஸ்ரீலங்கா நமதே... நம் ஸ்ரீலங்கா
சிங்களவர் தமிழர் முஸ்லிம்
நாமிணைந்தே இன்று
சுதந்திர தினம் கொண்டாடுவோமே!