It It கலைமகன் கவிதைகள்: 2025 Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

செவ்வாய், 21 ஜனவரி, 2025

பாரதி வாழுகின்றான்! - வாங்கனூர் அ மோகனன்.

பாரதி_வாழுகின்றான்!

(அறுசீர் விருத்தம்)

வேரிலா நாற்றைக் கொண்டு
விண்வரை அகம்வளர்த்தான்!
யாரவன்? நம்பாட்டன்தான்!
அவன்தமிழ் நம்மிடத்தில்
வாரித்தான் வழங்கி வைத்தான்!
வண்ணத்தில் குழைத்தும் தந்தான்!
பாரதிப் புலவன் வாழ்க!
பாருள்ள மட்டும் வாழ்க!
பாட்டென ஒன்றை நாட்டிப்
பைந்தமிழ்ப் படையல் போட்டான்!
ஆட்டமாய் ஆட்டு வித்தான்
அழகிய மயிலை எல்லாம்!
கூட்டமாய்க் குயிலைக் கூட்டி
குக்குக்கூ பாட வைத்தான்!

திங்கள், 20 ஜனவரி, 2025

ஹைக்கூ கவிதை தொடர்பாக கவிக்கோ

ஹைக்கூ கவிதை தொடர்பாக கவிக்கோ அப்துல் ரகுமான் வழங்கிய செவ்வி

இரவு நேரம். கண்களுக்கு எதுவும் புலப்படாத சூழல். புல்லின் நிழலில் பூச்சி இருப்பதையும் காண முடியாத நிலை. ஆனால், பூசன் ஓசை வழியே பூச்சி இருப்பதை உணர்கிறார். இரவு நேரத்தில் துல்லியமாய் ஒலி, ஒளி, நிழல், இருட்டு என அனைத்தையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கும் கவிஞரின் உள்ளம் இதன்வழி புலனாகின்றது.
கடைப் புத்தகங்கள்
கனமான பொருள்
இளவேனில் காற்று
-கிடோ
இளவேனில் காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கடையில் புத்தகங்கள் மேல் கனமான பொருள் வைக்கப்பட்டிருக்கிறது. அது காற்றின் வருகையை நமக்கு உணர்த்தும் பொருளாகிறது. நம்மைச் சுற்றி இயற்கையின் வருகையும் மாறுதலும்

சனி, 18 ஜனவரி, 2025

தாய்மொழித் தினத்திற்காக ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன் |

'கலைமகன் கவிதைகள்' எனும் எனது வலைத்தளத்திற்கு வருகைதந்துள்ள உங்களை அன்புகூர்ந்து வரவேற்கிறேன்.

இறையருள் கொண்டு, எதிர்வரும் மாசி மாதம் 21 ஆம் நாள், மீண்டுமாய் எவ்வாண்டும் போல் இவ்வாண்டும் பன்னாட்டுத் தாய்மொழித் தினம் கொண்டாடப்படவுள்ளது.
 
அந்நந்நாளை முன்னிட்டு, எனது (http://kalaimahanfairooz.blogspot.com/)

செவ்வாய், 14 ஜனவரி, 2025

பெயரெச்சம், பெயரடைஎன்பவற்றிற்கான வேறுபாடு என்ன?

பெயரெச்சம் காலம் காட்டும்.

உதாரணம்: சென்ற ஊர். படித்த புத்தகம். வழங்குகின்ற பரிசில்,

வாங்கிய பதக்கம்.

இவற்றுள் சென்ற, படித்த, வழங்குகின்ற, வாங்கிய என வரும் சொற்கள் அனைத்தும் காலம் காட்டுகின்றன.

பெயரடை காலம் காட்டாது. 

திங்கள், 13 ஜனவரி, 2025

2025 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்

 

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அகிலஇலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

பெயரடை, வினையடைகள் பற்றி இலக்கண நூலார் கருத்து

தமிழ்மொழி மாபெரும் ஆழி போன்றது. அதனது இலக்கணம் ஆழ்மனதில் பெருங்களியை உண்டாக்க வல்லது. ஆயினும், இன்று இலக்கணத்தைத் துறைபோகக் கற்போர் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றமை துன்பியல் சம்பவமாகும் எனத் துணிகிறேன். 

தமிழ் கற்பிக்கும் சகலரும் ஆழ்கடலில் முத்து எடுக்கப் புகுந்தார்களா? என வினவின், அதற்கான விடை எள்ளளவே என்பது எனது எண்ணப்பாடு. (ஆம், நாம் கற்றவை எள்ளினும் நுண்மையே.)

இலக்கியத்தைக் கற்பிப்பதற்கு ஆழஅகல இலக்கணம் தெரிய வேண்டும்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

தமிழ் வளர்ச்சி என்றால் என்ன?

'கலைமகன் கவிதைகள்' எனும் பெயரில் எனது வலைத்தளம் நடைபோட்டாலும்கூட, தமிழ்மொழி சார்ந்த பிறரது ஆக்க  இலக்கியங்களுக்கும் கைகொடுத்து தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும் என்பதே எனது எண்ணப்பாடு. நுனிப்புல் மேய்ந்து தமிழைக் கற்கவியலாது என்பதை தமிழ்மீது பற்றுடைய அனைவரும் எண்ணற்பாலது.