It It கலைமகன் ஆக்கங்கள் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

தெல்தோட்டை நஸீரா ஸலீமின் கவிதைகள் இரண்டு

வாடும் நிலாவே!-----------------------------
இருமைத் துலங்கிச் சுழலும்
பிரபஞ்ச வெளியில்
துளாவிக் கதிர் பரப்பிய
பரிதியின் பிரதியாய்
பூரணை நிலவு !

பகலவன் பிரிவால் படர்ந்த
இராக் காதலியின்
கவலை ரேகைகளை
ஆற்றுப்படுத்தவே
இரவலை முறுவலாக்கிப்
பிரகாசிக்கும்
செவிலி அவள் !


மதியின் விதி உணரா
விண்மீன் தோழிகள்
வான் தலைவியை சூழ்ந்தே
தன் எழில் சிந்தி
கண் சிமிட்டி
நிலவைப் பழிக்கும் !

எத்தனை குத்தல் கதைகளை
கேட்டேனடி வான்மகளேயென
வாட்டத்தில் வதங்கியே
உடலிளைத்து
மனம் உடைந்து
குளிர் நிலவும்
ஒரு நாள் போர்த்தியுறங்கும் !!
நியாயம் கேட்க வகையின்றி
ஒற்றையாய் நேசித்தது சொல்லா
இராக்கடலும்
உள்ளுக்குள் குமுறும்
அமாவாசையில்
அந்த மதியைப்போலவே...

- நஷீரா பின்த் ஹஸன் (2020.04.07)

---------------- 2 ----------------

நானும் உங்களில் ஒருவன்-----------------------------------------------
தலைநகரின் தலைசிறப்பிற்காய்
தலை எழுத்தை விலைபேசி
அலைகழிக்கப்பட்ட
மலையக உழைப்பாளிகள் நாம்!

காய்ந்த ரொட்டித்துண்டிலும்
கசட்டைக் கோப்பையிலும்
காலம் கழிவதை
காலங்காலமாய் சகிப்பதா
சுகிப்பதாவென
மூட்டை மூட்டையாய் கனவு சுமந்து
கொழும்பு வந்தோமன்றி
கொழுப்பெடுத்து வரவில்லை.

ஞாயிறு, 22 மார்ச், 2020

உதிர்ந்தது ஒரு பூ!

ஜனனியில் கால்பதித்தபோது
அங்கு நானும் நீயும்
உல்லாசமாக நின்றோம்...
எனக்கான மேசைப் பக்கமாய்
நீயும் வந்தமர்ந்து
இலக்கியம் பற்றி
ஏற இறங்கப் பேசினாய்...
கடைக்குட்டியாகவே
அன்றிருந்தேன் நான்...
பத்திரிகை பற்றி
ஏதும் அறியாத பால்ய பருவம்
தேடலில் ஈடுபடவே
சதாவும் மனம் விரும்பும்
காலமது...
மேமன் சமூகத்து
நீயோ அப்துல் கலாமாய்

சனி, 21 மார்ச், 2020

நீயன்றி யாரழிப்பர் CORONA (Covid - 19) வை!



தரணியின் முடிவு வந்துற்றதோ கொரோனா
தானாக வந்துற்றதோ தனிமையின் வாட
பேரணியாய் பயந்து மக்கள் எலோரும்
பரிதவிக்க காரணந்தான் ஏதிறைவா நீயறிவாய்!

உன்னருஞ் செயல்களில் நாட்டமின்றி நிலத்தார்
உயர்ந்தே நின்றிட பற்பல ஆற்றினர் பேராய்
சின்னவருஞ் சாகின்றார் எந்நேரமோ எனச்சொல்லி
சகமனைத்தும் படைத்தோனோ நீயன்றி யாரறிவார்?

செவ்வாய், 21 ஜனவரி, 2020

துயரி லாழ்த்திச் சென்றது வெண்கலக்குரல்!

ஆழ்ந்த கலைகளை ஆழமாய்க் கற்றிட்டார்
அன்பொ டவற்றை யகங்களுள் விதைத்திட்டார்
ஆழ்ந்து இறையில் பக்திமிகக் கொண்டிட்டார்
ஆண்டவன் சந்நிதி யினிலின்று சேர்ந்திட்டார்

வாழ்ந்து வரலாறுதான் வைத்துச் சென்றிட்டார்
வானமன்ன மக்கள் மனதினிற் றேர்ந்திட்டார்
சூழ்ந்து மாணாக் கருட்டந்தை யாய்நின்றார்
சுவனத்து நல்மணங் கமழவே சென்றிட்டார்

செவ்வாய், 3 டிசம்பர், 2019

மலையகத்தானில் ஏனிந்த சீற்றம்? - கலைமகன் பைரூஸ்

காந்தள் விரல்கள் கருவடு மேய்ந்திட
காலம் முழுதும் மாற்றான் மகிழ்ந்திட
எந்தன் பரம்பரை உழைத்துத் தேய்ந்தது
ஏனிப்படி ஏணிப்படியெமை தூற்றுவது

ஈழநாடு பெருமை பெற்றிட எம்மவர்
இரவும் பகலும் கஞ்சி குடித்திட
தோழமை பூத்து குளவிகள் கொட்டிட
தேநீரெமை நீரேனோ வைவது இழுக்காய்!

ஞாயிறு, 17 நவம்பர், 2019

விருந்து எப்படித் தருகிணமோ அறியோம்....!


வெடிக்கிறது எங்கும் பட்டாசு
துடிக்கிறது சிறுபான்மை மனசு
கடித்திடுமா சிங்கம் மீண்டும் என
அடிமனதில் எரிகிறது ஐயமேதீயாய்!
---

வியாழன், 31 அக்டோபர், 2019

தலைவருள் தலைமகனார்! - கலைமகன் பைரூஸ்

விண்ணைப் படைத்து மண்ணைப் படைத்து
வீறுடை பற்பலவும் வியப்பாய்ப் படைத்து
தண்ணளி முஹம்மதரை தரணிக்குத் தந்த
தயாளன் அல்லாஹ்வே உன்நாமம் உரைத்து..

இருள்படர்ந்த ஜாஹிலியாக் காலந் தனிலே
இருள்நீக்க அருக்கனாய் வந்துதித்த வல்லள்
அருமந்த செயல்தனை நான்பாட இறையே
பொருளுடை நற்றமிழ் என் நாவினுக்குத்தா!

செவ்வாய், 15 அக்டோபர், 2019

கூசா தூக்கியது போதும்... உங்கள் வலிக்கு நான் ஏது செய்ய?



















ஆளுக்காள் கூசாதூக்கித் திரியும் ஆட்களே!
அயர்ந்து தூங்காது சொல்வதைக் கேளுங்கள்...
நாளுக்குநாள் எம்முதிரம் சிந்தியே உழைத்தோம்
நாட்டுக்கு எம்வரிகளையும் ஈந்தே யழிந்தோம்...

டும்டும்டும் எனவே வானுயர்கின்றன ஓலங்கள்

கண்ணியம் காப்போம்... (சிறுவர் பாடல்)













பெற்றவர் தன்னைப் போற்றிடுவோம்
பேணும் தந்தையைப் போற்றிடுவோம்
கல்வியை நாளும் கற்றிடவே கனியவர்
குருவினைப் போற்றிடுவோம்!

உற்றவர் தன்னைப் போற்றிடுவோம்

செவ்வாய், 21 மே, 2019

வீராப்புடன் எழுவோம் - கவிதை

நீங்கள் புனித யுத்தம் புரிந்ததால்
இருபது இலட்சம்
நாங்களல்லவா புதைகுழிக்குள்
புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேடு கெட்ட
கேணப்பயல்கள் செய்த
கோழைத்தனத்தால்
நாம் கோவணம் இழந்து
கூனிக் குறுகிப் போகிறோம்.

சனி, 29 டிசம்பர், 2018

பெற்றோர் எவ்வழி பிள்ளைகள் அவ்வழி!

நற்றருக்கள் நல்லனவே ஈயும் மதுரக்கனிகளாய்
நல்லுார்கள் நல்லோரையே நிலத்திற் றாங்கும்
போற்றற்குரிய ஆணும் பெண்ணும் இணைந்து
பெற்றிடும் பிள்ளைகளும் சிறப்பர் இருமையும்

புதன், 10 அக்டோபர், 2018

உளமதில் இடியாய் இடித்திடு வாய்நீ!

அடிமன தினாழத் தினினெனை வாட்டியே

அடிபடர்ந் திடுபா செனவிருந் ததேயடி

கடினமாய் பேரிடியாய் அறைந்திடு கன்னத்தடி

காதினினென் னொலியினின் குறைதந்த தேயாசான்!

சனி, 22 செப்டம்பர், 2018

நல்ல திருமணம்....?



திருமண மண்டபத்தில்
இவ்வாறிருந்தது...

'படம் பிடிப்பது முற்றாகத் தடை...'

அதற்கு மேலால் சற்று
கண்களை உயர்த்திப் பார்த்தேன்..

முக்காடின்றிய
பல மாற்றுமதப் பெண்கள்
'செல்பி' எடுத்துக் கொண்டிருந்தார்கள்..

கீழே இறங்கி வந்தேன்...

ஒரு பிச்சைக்காரன்
திருமண மண்டபத்தையும்
வருகின்ற போகின்றனவர்களையும்
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்...

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

சாதி? - கலைமகன் பைரூஸ்

பிறந்தது நானும் நீயும் அம்மணத்தோடு...
பிதற்றுகின்றாய் இன்று நீ
பெருச்சாளி நானென்று...
உச்சாணியில் இருப்பதாய்ச் சொல்கிறாய்
உன்சாதிதான் பெரிதென்கிறாய்...
உன் கருமங்களை ஆற்றிக்கொள்ள
நான் - நாங்கள் - எம்மவர்
உனக்கு - உங்களுக்கு
பத்தரை மாற்றுத் தங்கம்....


திங்கள், 20 ஆகஸ்ட், 2018

தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்

தடாகப் பன்னாட்டுப் படைவிழாவின் கவியரங்கிற்காக எழுதிய கவிதை. காலதாமானால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றாலும் என் தளத்தில் ஏற்றி புளகாங்கிதம் அடைகிறேன்.

தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்
தெங்கு வளர்ந்தோங்கும் தென்னகத்திருந்திங்கு
தௌ்ளு தமிழில் தெவிட்டாக்கவிபாடிடயான்
மங்காப் புகழுடையோர் முன்னேநாபிறழாமல்
மாண்புறு கவிபாடிட மாபெரியோன்நீயேதுணை!

முக்காட்டின் முழுநிலவைப் பேணிடுவோம்

முக்காட்டுக்குள் முழுநிலவாய் முகன்புதைத்து
பக்கவாட்டில் ஆரும்காணாதே பதுங்கியிருந்து
நீக்கமறுநாணக்கானில் நிற்கும் நற்காரிகையாள்
நற்றமிழை சீராய்ப்பொழியும் நற்றமிழாளேத்தினன்!


ஏத்திப்புகழ்ந்த காரணந்தான் ஏற்றம்கொள்வாரறிவர்
எடுப்பாய் கவிபடைத்த எடுத்துதிர்த்ததையறிவர்
நித்தமும் பாவடித்தபாவமைப்பு நெஞ்சினிக்கும்
நல்லாளலவள் பெற்றெடுத்தவர்தான் புகழ்ந்தேன்!

புதன், 8 ஆகஸ்ட், 2018

உன்றமிழி லெனையிழந்தேன்!

இயற்றமிழின் வித்தகன்நீ இயற்றிய நற்றமிழ்தான்
இதயத்தொடு ஒட்டியேயுளது இத்தரைத் தமிழுளத்து
செயற்கரியன செய்து சாதித்தாய் நற்றமிழிற்பல
சொல்வதுநான் எங்ஙனந்தான் செவியேற்க நீயிலையே!

நெஞ்சிற்கு(ள்) நீதியும் தென்பாண்டி(ச்) சிங்கமும்
நலமான குறளுக்காய் நீள்பனுவல் குறளோவியமும்
விஞ்சுபுகழ் நீட்டிநீதான் விந்தையாய் சங்கத்தமிழும்
விதவிதமாய் உனக்கான வித்துவத்தில் தந்தாய்பல!

வியாழன், 19 ஜூலை, 2018

தேடிவந்த விருதுகள்.. கூடவே முகநூல் கருத்துக்கள்

நான் எதிர்பாராமலேயே அல்லாஹ் அருளால் இவ்வாண்டு, இரு விருதுகளுக்கு நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
1. “தமிழ்ச்சுடர்” விருது - தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு.
2. “ஊடக பேனா விருது 2K18" - அல்-மீஸான் பவுண்டேஷன், ஸ்ரீலங்கா.
தெரிவுசெய்த இரு அமைப்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

திங்கள், 16 ஜூலை, 2018

கொக்கு விடு தூது - கலைமகன் பைரூஸ்

**************************************************************
செங்கண் வெண்குருகே செல்லுமிடம் சொல்லாயோ?
செய்திகள் போய்த்தான் சேர்ந்தாரிடம் சொல்லாயோ?
எங்கண் நிறைந்துள்ள என்னவரிடம் நீதான்சென்று
எழிற்றமிழின் ஏற்றத்தை எடுத்துரைக்க மாட்டாயோ?
அங்கையினின் அவரென்றும் அகத்தினின் அவரென்றும்
அன்னமே மேகத்தொடு அலைந்து சென்றுநீதான்
ஏங்கிநிற்கும் அடியாளை ஏரெடுக்காது பற்றிநீதான்
எடுத்தோத மாட்டாயோ? என்தாபம் நீக்கமாட்டாயோ?

**************************************************************

அப்புள் அழகாய் அணிநடை போடும்நீதான்
அடியாள் பாடும் நற்றமிழ்கவி எடுத்துச்சொல்லாயோ?
எப்போதும் என்னுள் ஏற்றமாயுள என்னவரிடம்
ஏக்கங்கள் பற்றிநீதான் நற்றமிழில் பாடமாட்டாயோ?
தூதுவிட உனைப்போல் தரமாம்புள் எனக்கிலையே
தமிழச்சி என்னவளின் நாணம்விட்டு சொன்னேனே
ஏதுமறியாதே செல்வந்தேடும் என்னவரிடம் சென்று
என்னிலை எடுத்துச்சொல் ஏன்சுணக்கம் விரைந்துசெல்.
-கலைமகன் பைரூஸ்
15.07.2018
**************************************************************
நீளும்... இன்ஷா அல்லாஹ்!