It கலைமகன் கவிதைகள்: ஸம் ஸம் நீரூற்று

ஞாயிறு, 29 ஜூலை, 2012

ஸம் ஸம் நீரூற்று














இப்றாஹீம் ஹாஜர் மைந்த னிஸ்மாயீல்
இதமாம் மாமனிதரின் வரலாற்றொடு
உப்பரிகையில் நிற்பது ஸம்ஸம் ஊற்று
உலகி லதிசய நீரூற்று - நீ காணு!

இஸ்லாம் பெருகிட முன்பிருந்தே மாந்தர்
இங்கித நிகழ்வுக்கெனப் பருகிய பானம்
விசுவாசம்கொளா குறைஷியரும் பருகியபானம்
விடிவு கண்டார் அருந்தி அதிசய பானம்!

முஸ்லிம்களிடை இரண்டாம் கிப்லா வது
முதலவன் அருள்மாறி பொழிந்திடு மங்கு
விசுவாசங்கொண்டார் மனமகிழ்ந் தருந்த
வாகாயமைந்துளது காணீர் - சீராய்!

ஆண்டாண்டு காலம் ஹாஜிகளங்கு
ஆனந்தமாய் அள்ளியெடுத்தும் இற்றைவரை
குன்றிமணியளவேனும் குறைந்ததோ ஸம்ஸம்
குவலயம் படைத்தான் அதிசயம் காண்பீர்!

நபிகனாதர் ஸம்ஸம் எடுத்து மதீனம்புகுந்து
நோயோடுழன்றார் மீதுதூவி பருகிடச்செய்தார்
நபிவழி செப்பிடும் ஏடுகள் செப்பிடு மிதனை
நாயன் படைத்த நீரின் மாண்பினைக் காணீர்!

பல்மடங்கு கனியுப்புத்தான் கொண்டு
பலமா யுடலை மாறிடுதே ஸம்ஸம் ஊற்று
நாள்கடந்தும் நலங்கெடா திருந்தேவந்திடும்
நலம்மிகு ஸம்ஸம் ஊற்றினைக் காண்பீர்!

சுவைமிகு பானம் ஸம்ஸம்மே - இது
சுவையில் குறைந்துளதோ இற்றைவரை
பாவங்க ளழியும் நல்நிய்யத்துடனே பருக
பாரே வியந்திடும் ஸம்ஸம் காண்பீர்!

சுஹைலிப்னு அம்ருக்கு வரைந்த ஓலையதில்
கணமும் நில்லாது அனுப்புக ஸம்ஸம் என்றார்நபி
சுஹைலின் நல்லாள் ஐயூ பிப்னு அப்துல்லா கரம்
கங்குலிலே யழித்தார் மனம்நெகிழ்ந்தாரே நபி!

எப்பிணிக்கும் மருந்தாகும் ஸம்ஸம் -அது
எந்நோக்கமும் தெளிவாக்கும் பசிநீக்கும்
தப்பே யிலாத நீர்ச்சுணையே ஸம்ஸம்மே
தயாளனவன் தனிப்பேற்றினைத் தகைத்தேனே!

- கலைமகன் பைரூஸ்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக