It கலைமகன் கவிதைகள்: 2022

திங்கள், 26 டிசம்பர், 2022

போதையைத் துடைத்தெறிவோம்!

வலிமை பெற்றோம் நாமே என்று

வன்மம் பேசுகிறான் - வலியோ டின்று

நலிந்தே நிலத்தில் உருவே மாறி

நிலமே நகைக்க நாணிக் குனிகின்றான்

 

வியாழன், 10 நவம்பர், 2022

மரபினைப் படி!



 -------------------

மரபினைப் படியழ காய்ப்படி தமிழ்க்கவி

மாண்புற வேபடி !மாத்தமிழ் மகிழ்கொள

சிரமதில் கொளப்படி சிகரம துதொடவே

சிலையது எழுத்தென நின்றிடப் படிநீ

செவ்வாய், 1 நவம்பர், 2022

கதறும் ஓர் ஆன்மா! - பேருவளை றபீக் மொஹிடீன்

 

எனக்குள் தொலைந்துபோன

 என் நிம்மதியைத் 

தேடியலைகிறேன்.....


காலமும் கழிகிறது

மரண வலியோடு....

வாழ்வோ தொடர்கிறது....

சனி, 17 செப்டம்பர், 2022

ஆதங்கம்! - கலைமகன் பைரூஸ்


தென்னகத்து - மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் தமிழ் இலக்கிய முயற்சிகளை ஆய்வு செய்யுங்கால், வெலிகம - மதுராப்புர (மதுராகொட) த.சா. அப்துல் லதீப் அவர்களை மறந்து ஆய்வினை எழுதவியலாது.

1940 களுக்கு முன்னர் மதம் சார் இலக்கிய முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன. அக்காலத்தில் வௌிவந்த இலக்கியங்கள் பெரும்பாலும் ஆலிம்களாலும் (மார்க்க அறிஞர்கள்) மதத்தைக் கற்றுத் தேர்ந்தோராலுமே ஆக்கப்பட்டன. இந்தவகையில் 1936 களிலேயே 'தமிழிற்சூரியன்' என்று யாழ் மக்களால் பாராட்டிப் போற்றப்பட்ட தம்பி சாஹிப் அப்துல் லதீப் அவர்கள் 'இரட்சகத்தூதர் முஹம்மது நபி (ஸல்)'

செவ்வாய், 22 மார்ச், 2022

ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலய பாடசாலைப் பண்

 


பேரிறையே புகழனைத்தும் உனக்கே!

நாளுக்கு நாள் மின்னிப் பிரகாசிக்கும், 67 ஆண்டுகளைக் கடந்த ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலயத்தின் பாடசாலைப் பண்ணை எழுதக்கிடைத்தமை பெரும் பேறே...

-------------------------------------------------------

அல்-மாஸ் பாடசாலைப் பண்

-------------------------------------------------------

 விண்ணையும் மண்ணையும் படைத்தாள்பவனே

விடிவினை அகமதில் தந்தருள்பவனே

கல்பினில்  உனையே வைத்தோம்

கருணை  மழையே  பொழிவாய்! //

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

அக்கினிச் சிறகே...எழுந்து வா! - 'கலைநிலா' அப்ரா, மதுராப்புர


 

கவிதைக்கு சொல்லழகு போல்
 பூவிற்கு  இதழழகு போல்
வதனத்திற்கு சிரிப்பழகு போல்
உலகிற்கு பெண்மை அழகம்மா...
     
உலகம் பிறந்தது பெண்மையால்
 சமூகம் வளர்ந்தது பெண்மையால்
அழகும் நிறைந்தது பெண்மையால்
அமைதி திகழ்ந்தது பெண்மையால்