It கலைமகன் கவிதைகள்: 2023

திங்கள், 6 நவம்பர், 2023

எனை உச்சாணியில் ஏத்திய வகவமும் அடையாளம் தந்த தினகரனும்! - கலைமகன் பைரூஸ்

    என் எழுத்துகளுக்கு அச்சாணியாய் அமைந்தது 'தினகரன்' என்று சொல்லிக் கொள்வதில் முதலில் நான் பெருமிதமடைகின்றேன். எனது ஆரம்ப எழுத்துக்கள் தினகரன் சிறுவர் உலகத்திலேயே (ஆனந்தி அக்காவின் தயாரிப்பில்)  1985 களில் முகிழ்த்தது. 

மறந்திட அருள்தருவாய்!


எலோரும் ஏத்திடத் தானென் னாசானும்

ஏத்தினார் ஏத்தினேன் ஏற்றமாய் என்னில்

அழுதேன் அவர்மொழி கேட்டே யானும்

ஆடித்தான் போனதுள் ளந்தான் பிளந்தது! 

வெள்ளி, 6 அக்டோபர், 2023

கலைச்சுடரே வாழ்க! - 'தமிழ்ச்சுடர்' கலைமகன் பைரூஸ்


வாரிஸலி மௌலானா வெனும்பெயர் கொண்டு

எம்மனத்தில்  ஆழப்பதிந்து இருப்பாய்க் கொண்டு

சீரியராய் சிந்திக்க இனியராய் இருப்பதற்றான்

சீர்கவிதை எழுதித்தான் புகழ்கின்றேன் இந்நூல்கண்

பேரிலுள  மௌலானா  வெனும்பதந்தான் உயர்விங்கு

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

அப்ரா அஸ்ஹரின் 'முதல் நிலா' நூல் அறிமுக விழா


வெலிகம - மதுராப்புர, இளம் கவிஞர் அப்ரா அஸ்ஹர் அவர்களின் 'முதல் நிலா' நூல் அறிமுக விழா எதிர்வரும் 2023.08.30ம் திகதி, மதுராப்புர அஸ்ஸபா மகா வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

அஸ்ஸபா மகா வித்தியாலய அதிபர் திரு. எம்.எஸ்.எம். ஹிப்ளர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள அந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரும், வெலிகம பிரதேச சபையின் முன்னாள்

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

நஜ்முல் ஹுஸைனின் 'வேராகா வேர்கள்' வௌியீட்டு விழா

ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் என். நஜ்முல் ஹுசைன் எழுதிய 'வேறாகா வேர்கள்' சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா இன்று 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, அல் ஹிதாயா கல்லூரியின் எம்.சீ. பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெறும். 

இந்த நிகழ்வுக்கு மன்றத் தலைவர் கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையேற்கவுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

வெள்ளி, 21 ஜூலை, 2023

வீண் சாதிகள் ஓதிடும் பூதங்களே! - பஸ்ரியா மன்ஸில், தெல்தோட்டை


பாரத நாடென்னும் போதினிலே -தேள்

வேருடன் கொட்டுது காதினிலே
நீதிகள் மீறிடும் சூதினிலே இனி
நாறிடும் பாரதம் தோதினிலே
விண்மதி ஆயிரம் அனுப்பியென்ன -அங்கே

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

அது! - கவிஞர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்


பச்சைத் தசை புசிக்கும்
இரத்த வெறி பிடித்த ஒரு மிருகத்தைப்போல்
உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
அது

உனது ஒரு சொல்லில் -
எழுத்தாக
குரலாக
வெளிவரும் ஒரு சொல்லில்
நீ சறுகும் வரை
அவதானித்துக் கொண்டேயிருக்கிறது
அது

வியாழன், 30 மார்ச், 2023

ஓர் ஆன்மாவின் கதறல் 2 - பேருவளை றபீக் மொஹிடீன்

 


                        (2)

எனதான வாழ்வின் வலி

 இன்னும் என் உயிரோடு

 உரசிக்கொண்டுதான் இருக்கிறது...

வாழ்தல்  கடினமானது...

 சிரிக்க மறந்த பொழுதுகளில்தான் 

உணர முடிகின்றது...

சனி, 25 மார்ச், 2023

வெற்றிடம் ! - பஸீனா


 வெற்றிடம் 

ஒன்றிருக்கிறது


ஒன்றுமேயில்லாததால்

எதை வேண்டுமானாலும்

வைத்துக்கொள்ளலாம் வெற்றிடம்