It கலைமகன் கவிதைகள்: மே 2020

சனி, 23 மே, 2020

நிறங்களுடன் கூடிய நல்லதொரு குடும்பம்....



நீரில் சாகப்போனவளைத் தாங்கப் போனவன் ஒரு முஸ்லிம்
சாகப்போனவளோ தமிழச்சி
சாகப் போனவளைக் காத்தவன் சிங்களவன்
இறந்தவனின் தந்தையோ முஸ்லிம்
இறந்தவனின் தாய் பெளத்தம்
இறந்தவனின் தாரமவள் கிறித்தவம்
பிள்ளைகள் இருவரும் பெளத்தம்...

இறந்தவன் தாங்கிய பெயர் முஸ்லிம்

நாளை பெருநாள்....!



அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...
வீட்டுக்குள்ளிருந்து
ஈகைப் பெருநாள் காெண்டாட
அல்லாஹு அக்பர்...

யாஅல்லாஹ்!
தியாகத் திருநாளை
குடும்பங்களோடு
கொண்டாட அருள்புரிவாயாக!

வெள்ளி, 22 மே, 2020

கைவிலங்கு!



இடது கையறிய
கொடுத்தது வலது கை....
பலர் அறியப்பூட்டியது
விலங்கு!
என்றாலும்,
உள்ளமறிந்தவன் இறைவனே!

மனிதத்தை விதைத்துச் சென்றாயே நீ!

தன்னுயிரைத் துச்சமென மதித்தாய்...
தன்தாரம் பிள்ளைகளை மறந்தாய்...
மனிதாபிமானம் உன்னுள் ஓங்கியதால்
மதமேது இனமேது என்று எண்ணவில்லை....
மன்னுயிரைக் காத்திடவே...
சட்டென்று பாய்ந்தாய் நீருனுள்...
அவள் பிழைத்தாள்...
நீயோ மிதந்தே வந்தாய்...
மீளாத் துயரில் உன்குடும்பம்...

இறைவனிடம் நல்சுவனத்திற்காய்
இருபத்தேழாம் நோன்பில்
இருகரங்களையும் ஏந்தியவனாய்...
உன்னை டிஜிட்டலில் செதுக்கி
அழகு பார்க்கின்றேன்....