It கலைமகன் கவிதைகள்: ஏப்ரல் 2023

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

அது! - கவிஞர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்


பச்சைத் தசை புசிக்கும்
இரத்த வெறி பிடித்த ஒரு மிருகத்தைப்போல்
உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
அது

உனது ஒரு சொல்லில் -
எழுத்தாக
குரலாக
வெளிவரும் ஒரு சொல்லில்
நீ சறுகும் வரை
அவதானித்துக் கொண்டேயிருக்கிறது
அது