ஆங் சாங் சூச்சி...
சீச்சீ... சீச்சீ...
உன் பேரைச் சொல்ல
எனக்குள் நாக்கூசுகிறது...
சித்தார்த்தரின் சீரிய
வார்த்தைகளை
நீ அறியாதவளள்ளள்...
பஞ்சமா பாதகங்களில்
கொலையும் மாபாவம்
என்பது தெரியாதவளள்ளள்..
நாளைய நாள்
நீ பர்மாவில்
ஆட்சியமைக்க
இன்று
பர்மிய முஸ்லிம்கள்
கருவறுக்கப்படுகிறார்கள்...
ஆம்...,
எமது குமரிகளின் கற்புகள்
கல்பே இல்லாத உனது
அடிவருடிகளால்
சூரையாடப்படுகின்றன
ஒவ்வொரு நாழிகையும்
ஆயிரக்கணக்கானோர்
அநாதைகளாகின்றனர்...
உனக்கு
நோபால் பரிசு தருவதற்காய்
உன்னோடு பிறந்த
இழிசன ஓநாய்கள்
காத்துக் கொண்டிருக்கின்றன...
சீச்சீ... ஆங் சாங் சூச்சி...
உனது சூழ்ச்சி பற்றி
உலகம் கண்டும் கண்மூடி
கண்ணாம்பூச்சி ஆடுகின்றது..
நீ ஆங்கு செய்யும்
கேடுகெட்ட வேலை கண்டு
பொத்திக் கொண்டிருக்கின்றன...
ஊடகங்களில் வாய்களை
நீ பல்லாயிரம் கொடுத்து
பொத்தி வைத்திருக்கிறாய் போலும்!
அடக் கேடுகெட்டவளே...
இறக்கும் எனது உடன்பிறவா
உறவுகள் ஒவ்வொன்றினதும்
ஆத்மா - நாளை மஹ்ஷரில்
உன்னைக் காட்டிக் கொடுக்கும்
நீ பொல்லாதவள் என்று உரைக்கும்..
ஏ! ஆங் சாங் சூச்சி
அசின் விராதுக்கும் உனக்கும்
என்னதான் தொடர்பு...?
சொல்லிக் கொள்ள
வெட்கம் உன்னைக்
கவ்வுகிறது போலும்...
உனது வெள்ளை முகம்
நீ இறக்க முன்னரேயே
கருக்குளிக்கும் நிச்சயம்
நீயாகத் திருந்தி
பாவப்பட்ட பர்மிய உறவுகளுக்கு
நல்லன செய்யாதவிடத்து...
அடி! திருந்தடி..
அடி! போதுமடி
உன் கோட்டம்
பச்சோந்தி முகம் மாற்றி
உலகறிய உனக்கு
மானிட புகழ் வேண்டுமாயின்
எனதுறவுகளை
காவிகளிடமிருந்து
மீட்டித்தா...
நிச்சயம்
உனக்கு
நல்லது நடக்கும்!
சீச்சி மானமில்லாதவளே
என்று எனக்கு மீண்டும்
சொல்ல வைக்காதே
ஆங் சாங் சூச்சி!
-கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக