It கலைமகன் கவிதைகள்: மூத்தவர் சொல்லை மதிக்கணும்! -சிறுவர் பாடல் 1

புதன், 6 ஜூன், 2018

மூத்தவர் சொல்லை மதிக்கணும்! -சிறுவர் பாடல் 1


செல்லப்பாப்பா செல்லப்பாப்பா இங்கேவா
சொல்லும் செய்தி கேட்டு நீயும் திருந்தப்பா
கொள்ளை களவு பொய்யும் மிகவும் தீதப்பா
கனவிலும் செய்திட நீயும் எண்ணாதே!

செல்லப்பாப்பா செல்லப்பாப்பா இங்கேவா
சொல்லும் செய்தி கேட்டும் நீயும் திருந்தப்பா
நல்லவை சொல்லும் மூத்தோர்சொல் கேளப்பா
நாளும் நன்மை அதனால்தான் எண்ணப்பா!

செல்லப்பாப்பா செல்லப்பாப்பா இங்கேவா
சொல்லும் செய்தி கேட்டும் நீயும் திருந்தப்பா
சொல்லும் வார்த்தை கேட்டு நீயும் வாழப்பா
சிறந்த சொற்கள் மூத்தோர் சொல் எண்ணப்பா!

செல்லப்பாப்பா செல்லப்பாப்பா இங்கேவா
சொல்லும் செய்தி கேட்டும் நீயும் திருந்தப்பா
அல்லும் பகலும் மூத்தோர் வழியில் செல்லப்பா
அனுதினம் ஆண்டவனை மனதில் கொள்ளப்பா!

-கலைமகன் பைரூஸ்

1 கருத்து: