It கலைமகன் கவிதைகள்: முக்காட்டின் முழுநிலவைப் பேணிடுவோம்

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

முக்காட்டின் முழுநிலவைப் பேணிடுவோம்

முக்காட்டுக்குள் முழுநிலவாய் முகன்புதைத்து
பக்கவாட்டில் ஆரும்காணாதே பதுங்கியிருந்து
நீக்கமறுநாணக்கானில் நிற்கும் நற்காரிகையாள்
நற்றமிழை சீராய்ப்பொழியும் நற்றமிழாளேத்தினன்!


ஏத்திப்புகழ்ந்த காரணந்தான் ஏற்றம்கொள்வாரறிவர்
எடுப்பாய் கவிபடைத்த எடுத்துதிர்த்ததையறிவர்
நித்தமும் பாவடித்தபாவமைப்பு நெஞ்சினிக்கும்
நல்லாளலவள் பெற்றெடுத்தவர்தான் புகழ்ந்தேன்!



தேனேதான் நற்கவிகள் என்றுமென்னெஞ்சத்து
கற்பகதருவேதான் வான்கவிகள் என்னெஞ்சத்து
பு"ணேதான் பெருங்கவிகளெலாம் நீள்புவியில்
பேணியேநான் காத்திடுவேன் அகவலுமாரியில்!


அலுமாரியின் அடைத்துவைக்கும் இரத்தினமாம்
அன்பினிற்றிளை காரிகையாளென பகர்ந்திடுவர்
வீழாதனபகர்ந்திடும் பாவையரை நிலன்நோக்கார்
வானுயரஓதும் நல்லெழிலாளைத் துாற்றிடுவர்!


துாற்றித்துாற்றியே காலங்கள்தான் நீளுதிங்கு
தரணியைத்தான் தாயன்னாள் மாற்றுகிறாள்பாவால்
போற்றியே அவள்புகழ்பாடி ஏத்திடுவோம்நாம்
புதுமைப்பெண்ணவள் கவியுயர பாவடிப்போம்!


-தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்
19.08.2018




தடாகம் பன்னாட்டுப் படை விழா - 2018 (2018.08.18 சனிக்கிழமை) வில், நான் தமிழ்ச்சுடர் விருது மற்றும் கவித்தீபம் சான்றிதழ் பெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்.

விருது - பட்டம் பெறும்போது அருகிலிருப்பவர்கள் புரலவலர் ஹாஷிம் உமர், கவிஞர் குவைத் வித்தியாசாகர், தடாகம் கலை இலக்கிய வட்ட அமைப்பாளர் கவிதாயினி திருமதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ஆகியோருடன் முல்லைமகனும் காணப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக