It கலைமகன் கவிதைகள்: அலைகடல் அழகினை நுகரு....

வெள்ளி, 13 நவம்பர், 2020

அலைகடல் அழகினை நுகரு....

அலைநுரைகள் கரைதொட்டு ஆலிங்கனம் செய்ய
      அழகாழியங்கு அதிகாரமாய் சீறிப்பாய்ந் தங்குவர கலையோடு வெண்மேகம் கண்ணடித்துப் பார்க்க
     காற்றுப்போடு கலந்தங்கு விசிறி யடிக்கும்...

மௌனராகம் பேசிக்கொள்ளும் விண்மேக மங்கு
     மெல்லப்பேசும் காதலர்களின் இதழ்களை பார்க்க கௌரமாய் மதியவளை அருகணைத்து சொல்லும்
     கங்குலும் வந்தாயிற்று இவர்களின்னு மிங்கென்று

கண்ணாம்பூச்சியாய் தாரகைகள் கண்சிமிட்டி யங்கு
      கடலன்னையின் சீற்றம்தனை பாடிநிற்கும் ஒருசேர வண்ணமகள் வனப்பினை மாந்தர் ஏத்தும் வனப்பினை
     அங்குமிங்கும் மின்னி பரிந்துரைக்கும் சீறிப்பாயும் 

ஆழியாள் தன்னைப் பற்றி பேரம்பேச 
     சிப்பிகள் மண்ணடைக்குள் ஒளிந்து நீரோடாடும்
பாரீரெங்கள் சிறப்புதனை எனச்சொல்லி மீனினமும்
    பரந்து மேலெழுந்து முத்தன்னதாய் மகிழ்வெய்தும்! 

  - மதுராப்புர, கலைமகன்பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக