வெலிகம - மதுராப்புர, இளம் கவிஞர் அப்ரா அஸ்ஹர் அவர்களின் 'முதல் நிலா' நூல் அறிமுக விழா எதிர்வரும் 2023.08.30ம் திகதி, மதுராப்புர அஸ்ஸபா மகா வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
அஸ்ஸபா மகா வித்தியாலய அதிபர் திரு. எம்.எஸ்.எம். ஹிப்ளர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள அந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரும், வெலிகம பிரதேச சபையின் முன்னாள்
உறுப்பினருமான திரு.அஜ்மல் சத்தார் அவர்களும், சிறப்பதிதியாக முன்னாள் தென் மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.மதனியா கலீல் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.இந்நூல் ஏற்கனவே ஸ்கை தமிழ் ஊடக வலைமைப்பின் மூலம் நிகழ்நிலையில் வௌியிட்டு வைக்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.
நூலுக்கான அணிந்துரையை கலாபூசணம் திக்குவல்லை ஸப்வான் ஆசிரியர் எழுதியுள்ளார். வாழ்த்துரைகளை கவிஞர்.'தமிழ்ச்சுடர்' கலைமகன் பைரூஸ் ஆசிரியர் அவர்களும், கவிஞர்.மின்ஹாஜ் ஆசிரியர் அவர்களும் எழுதியுள்ளனர்.
அப்ராவின் நூல் அறிமுக விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக