என்னாசான் சிவகுருநாதன் கேசவன்
கேட்டிட்ட (மகாகவி பாரதியின்) வினாவினுக்கு
என்னகத்
துதித்த வரிகள் கோத்தேன்
கருத்தினை நோக்கியே நின்றேன்.
கண்டிட்டாய்
?
நீல
விசும்பினிடை என்ன கண்டிட்டாய் ?
திரித்த
நுரையினிடை என்ன கண்டிட்டாய் ?
சின்னக்
குமிழிகளில் என்ன கண்டிட்டாய் ?
பிர்த்துப்
பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்ற நலன்கள் என்ன ?"//
-------------------------
பெற்ற
நலன்தான் சொல்லக் கேட்பீர்
பாற்கடல்
கண்டுயான் நிலையா வாழ்வில்
பெற்ற
ஏற்றந் தாழ்வினை சொல்வேன்
பாரின்
பகட்டு வாழ்வின் போலிதனை
பெற்ற ஏட்டின்
நலனில் தெளிந்தேன்
பட்டம்
பதவி நூலருந் தேவீழும்
பெற்ற
வரன்பே உயர்ந்தே வாழும்
பாங்கினை
கண்டே னதுவும் நலனே!
நீலவிசும்
பினிடை யானுண்ட னகேட்பீர்
நீண்டே பரந்திருந்
தபோழ்தும் தானாய்
நிலமிசை
யேதும் செய்திட லாமோ
நீள்வா
னருக்கன் சுடர்மிகு மனைத்தும்
நலமாய்
உவமை யின்றியே படைத்தான்
நினைத்துப்
பற்பல வுருவகம் சொல்லினும்
நிலைபே
ருடையா னருளே யென்றவன்
நிலையினை யுணர்ந்தேன்
அகங்குளிர்ந் தேனே!
(வரும்
நுரை.... )
-தமிழன்புடன்,
கலைமகன்
பைரூஸ்
15.09.2023
-------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக