It கலைமகன் கவிதைகள்: எதுதான் தலை!

வியாழன், 5 ஏப்ரல், 2012

எதுதான் தலை!

வளர்ந்திடும் வரைக்கும் வந்திடுவார்
வளர்மதி யெனஉன்னி பேசிடுவார்
தளர்ந்திடும் வரைக்கும் தலைதாங்குவாரை
தரங்கெட்டே பேசுவர் இந்நிலத்தே!

மாடாய் உழைக்கும் உத்தமர்க்கு
மடிப்பால் ஈயார் சாணியே ஈவார்
கேடே இவர்க்கு செய்ந்நன்றி மறந்தார்
ககனமே சபித்திடும் அன்னவர்க்கே!

பேரும் பட்டமும் பெறுதற்காய்
பயனே நோக்கா துழைத்தார்க்கு
ஊரும் இவரும் செயும்பணி
உதரித்தள்ளும் பணியாமே!

நாளும் காலமும் நோக்காது
நலமே செய்த வுத்தமர்க்கு
தொல்லை தருதே ஈங்கிவர்பணி
தொலைவில் தருமோ நலமோதான்!

ஏற்றம் கண்டிட உழைத்தாரை
ஏறிஉதைப்பதுதான் அறிவோ?
நாற்றம் பேசிட இவர்பற்றி
நவின்றேன் யானென் றுந்தான்!

எழுத்தொன்றாயினும் ஈந்தோரை
ஏனோ நோக்க மறுக்கின்றார்?
உழுவதேது இவர்பின்னால்
உண்மை யறிவிது தானோ?

உயர்வுக்குக் காலா யிருப்போரை
உயர்ந்திட்டா லேறி யுதைத்திடுவார்
பெயருக்கே யெல்லாம் செய்வோரை
பெரும் பேதையென்பேன் நானே!

-கலைமகன் பைரூஸ் 05.04.2012 (பகல் போசன வேளை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக