It கலைமகன் கவிதைகள்: பின்றையே நிற்பது கூற்றம்!

புதன், 11 ஏப்ரல், 2012

பின்றையே நிற்பது கூற்றம்!

தனக்கே யெல்லாம் எனக்கருதி
தன்னலம் கருதி வாழ்ந்திடுவர்
ஊனே இலாமாந்தர்தமைக் கண்டும்
உதறித் தள்ளிப் போயிடுவர்!

கல்லினும் கடையராய் சிலமாந்தர்
காவினி லுலாவருவ துண்மை!
புல்லினிற் கசியும் நீரன்னதாயும்
பார்த்திடுவரோ இலவே இலை!

ஸக்கராத்து வரும்வரையு மிவர்
சொத்துப் பத்துத் தேடிவதில்முதல்
ஏக்கப் பெருமூச்சு விடுவரப்போ
ஏகஇறைவிடுவானா அப்போசொல்!

சுவைத்த தீரவேண்டிய ஸக்கராத்
சுவையாறும் தந்திடுமா நாவில்
காவில் நலிவுற்றோர் துன்பங்கண்டும்
கயவர்க்கு நல்சுவர்க்க மாமோசொல்!

உண்டிபருத்திட உண்டிடுவர் -கயவர்
உயிருக்கா யேங்குவர் நிலைகாணார்
அண்டியேனும் வாழ்வரோ நற்பதியில்
அல்லாஹ்வை யஞ்சிடின் அடைவர்கதி!

எளியவர் ஏக்கப்பெருமூச்சு தாம்விட
ஏறிமிறிப்பர் - ஏணியில்நிற்பர்
இளிப்பர் பல்லை மட்டுந்தான் பெரிதாய்
இகமீது பெரியவரிவராம் -பேதைகாண்!

நாளைக்காய் எருதாய் உழல்வரிவர்
நாழிகைகள் கழிவதைக் காணார்!
உழைத்திடும் பேதையரே இவர்!
உயர்ந்திடும் அறத்தினை காணாதோரே!

பின்றையே நின்றிடும் கூற்றம் நினையார்
பின்னே செய்திட முனைவ ரெல்லாம்
இன்னாரிவர்கள் திருந்திடும் காலமெப்போ
இறையைப் பயந்திடின் இகமே சிறக்கும்!!

-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக