It கலைமகன் கவிதைகள்: நானும் ஒரு முஸ்லிம்!

புதன், 26 செப்டம்பர், 2012

நானும் ஒரு முஸ்லிம்!


நான் நயந்த நல்ல கவிதை!
சுய விசாரணைக்கு உகந்தது. எனை நான் கேட்டுக்கொண்டேன். நீங்களுந்தான் கேளுங்களேன்! இந்த புதுச்சூடிகளில் உள்ள உண்மைத் தன்மையை எடுத்து சீர்பெறுங்கள்! தப்புக்கெல்லாம் ஆப்பு வைப்போம்!!
http://ashroffshihabdeen.blogspot.com/2012/09/blog-post_25.html?spref=fb



நானும் ஒரு முஸ்லிம்!



எப்போதும் நினைவிலிருத்திக் கொள்
நீ ஒரு முஸ்லிம்

ஒரு போதும் பொய் சொல்லக் கூடாது -
நீ ஒரு முஸ்லிம்

தொழுகையைத் தவற விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

நோன்பு பிடிக்காமல் இருந்து விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

ஸக்காத்தைக் கணக்குப் பார;த்துக் கொடுத்து விடு -
நீ ஒரு முஸ்லிம்

ஸதக்காக் கொடு -
நீ ஒரு முஸ்லிம்

வசதி வந்தால் ஹஜ்ஜை நிறைவேற்று -
நீ ஒரு முஸ்லிம்

தப்புகளுக்குத் துணை போகாதே -
நீ ஒரு முஸ்லிம்

மூத்தோரை மதித்து நட -
நீ ஒரு முஸ்லிம்

சிறியவர்களிடம் அன்பு காட்டு -
நீ  ஒரு முஸ்லிம்

வறியவர்க்குக் கட்டாயம் உதவி செய் -
நீ ஒரு முஸ்லிம்

பொதுவிடத்தில் கண்ணியமாக நடந்து கொள் -
நீ ஒரு முஸ்லிம்

ஒரு குழப்பவாதியாக இருந்து விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

வாகனம் செலுத்துகையில் ஒழுங்கைப் பின்பற்று -
நீ ஒரு முஸ்லிம்

விட்டுக் கொடு -
நீ ஒரு முஸ்லிம்

வீண் தர்க்கத்தையும் விதண்டாவாதத்தையும் தவிர் -
நீ ஒரு முஸ்லிம்

உனது நற்பண்புகளால் மற்றோரைக் கவர் -
நீ ஒரு முஸ்லிம்

யாரையும் அவமதிக்காதே -
நீ ஒரு முஸ்லிம்

நீயே பிரதானம் என்று பறைசாற்றாதே -
நீ ஒரு முஸ்லிம்

உன் சொல்லையே கேட்கவேண்டும் எனத் துள்ளாதே -
நீ ஒரு முஸ்லிம்

பொதுத் தளங்களில் மற்றவரைக் கவரக் கேனத்தனமாகப் பேசவோ நடக்கவோ முற்படாதே -
நீ ஒரு முஸ்லிம்

கோழையாக இராதே -
நீ ஒரு முஸ்லிம்

அபூபக்கரின் விசுவாசம் உன்னில் இருக்க வேண்டும் -
நீ ஒரு முஸ்லிம்

உதுமானின் உத்தமம் நீயாயிருக்க வேண்டும் -
நீ ஒரு முஸ்லிம்

உமரின் உருவிய வாளாக நீயிரு -
நீ ஒரு முஸ்லிம்

அலியின் ஆற்றல் உன்னில் தெரிய வேண்டும் -
நீ ஒரு முஸ்லிம்

நிறுவையில் நேர்மை செய் -
நீ ஒரு முஸ்லிம்

நயவஞ்சகனாக ஒரு போதும் இராதே -
நீ ஒரு முஸ்லிம்

பொதுச் சொத்தில் கை வைக்காதே -
நீ ஒரு முஸ்லிம்

பணிவு எப்போதும் உன்னில் படிந்திருக்க வேண்டும் -
நீ ஒரு முஸ்லிம்

அடக்கம் என்றும் உன்னை ஆட்கொள்ள வேண்டும் -
நீ ஒரு முஸ்லிம்

யார் மனதையும் நோகடிக்காதே -
நீ ஒரு முஸ்லிம்

எங்கும் எதிலும் கண்ணியமாக நடந்து கொள் -
நீ ஒரு முஸ்லிம்

நட்புக்காக, சொந்தத்துக்காகச் சார்பெடுக்காதே -
நீ ஒரு முஸ்லிம்

அளந்து பேசு, அநாவசியாமாய்ப் பேசாதே -
நீ ஒரு முஸ்லிம்

உனது தவறுகளை நியாயப்படுத்த இஸ்லாத்தில் ஆதாரம் தேடாதே -
நீ ஒரு முஸ்லிம்

உன்னால் தவறு நிகழின் பெருமனதுடன் ஏற்றுக்கொள்! -
நீ ஒரு முஸ்லிம்

கர்வமும் பெருமையும் உன்னைச் சேர விடாதே -
நீ ஒரு முஸ்லிம்

நீ எல்லாவற்றையும் புரிந்து கொள்வாய் -
நீ ஒரு முஸ்லிம்

ஒரு முக்கியமான விடயம் -
இவை எவற்றையும் நீ எனக்குத் திருப்பிச் சொல்ல எத்தனிக்காதே!

ஏனெனில்
நானும் ஒரு முஸ்லிம்!
 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக