It கலைமகன் கவிதைகள்: காப்பியக்கோவின் அழைப்பினால் களிகொண்டேன் இளவல் யான்!

புதன், 6 நவம்பர், 2013

காப்பியக்கோவின் அழைப்பினால் களிகொண்டேன் இளவல் யான்!

நேற்று இஸ்லாமிய புத்தாண்டின் முதல் நாள். (2013 11 05) இரவு 9: 55.

நான் பணிபுரியும் இணையத்தளத்திற்கு செய்திகள் பதிவேற்றிக் கொண்டு, முகநூலில் அவற்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.....


சோம்பல் கேடு! என்பதால் அவ்வப்போது, கல்வியியலாளர்களுடனும், நற்சிந்தனையாளர்களுடனும் அன்புறவாடும் வழக்கமுண்டு அடியேனுக்கு....

முகநூர் நல்லவை நிறையவே தருகின்றது... கூடவே ஸ்ரீஸ்கந்தராசா போன்றவர்களால் அவ்வப்போது, நல்லிலக்கண தகவல்களும் பகிரப்படுகின்றன.

நான் மிகப் போற்றும், என் மாணாக்கருக்கு அடிக்கடி எடுத்தோதும், புலவர் நாயகம், காப்பியக்கோ, நான் விரும்பும் மரபுக் கவிஞர் ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் என்னுடன் தகவல் பெட்டி மூலம் உறவாடலானார்...

தான் பண்பட்ட புலவனாயிருந்தும், இளவல் என்மீது கருணையன்பு காட்டி, அவருக்கு என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமாப்போல் இருப்பதாய்க் கூறி என் செல்லிடக் கைபேசி எண்ணை வினவினார்...

நான் கொடுத்து இரண்டு இரண்டு நிமிடங்களில் தொடர்பு கொண்டார். சரியாக மிகச் சரியாக இரவு 9 58 இலிருந்து தொடர்ந்து 0 5 57 நிமிடங்கள் அவர் பணத்தை கரைத்து என்னோடு சிரித்துறவாடினார்....

இன்னும் என் செவிப்பறைகளுக்குள் அவர் சிரிப்பொலி கேட்கிறது...

என்னைத் தட்டித் தந்தார்....
கன்னல் மொழியென தென்றார்....
கண்களால் காண வேண்டுமென்றார்....
கண்டும் கதைக்காததற்காய் ஊடல் கொண்டார்....
தன்பனுவல்களை பரிசாகத் தரவேண்டும் என்றார்....

கதைக்க முடியாமல் போனதே என்றல்லலுற்றார்...
கலைமகன் கவிதைகளில் தன்படம் கண்டு
களிகொண்டதாய் கீழ்ப்படிவாய்ச் சொன்னார்...
களங்கமிலாத உளத்தவர் என்பதைக் காட்டினார்...
கலைமகன் போன்ற இளவல்களுக்கு கரம் என்றார்...

பணிவின் தலையென்பதை சொன்னது பேச்சு....
சாமான்யான் யானென்பதைச் சொன்னது பேச்சு....

சிரிப்பொலி....

எங்களுக்குள் மகிழ்வைத் தந்தது....
மெய்ம் மறந்தோம்... அளவளாவினோம்....
மாபெரும் புலவர் தாதையால் நான்
தட்டிக் கொடுக்கப்பட்டதை நினைத்து
தணியாத சந்தோசத்துடனேயே பள்ளி சென்றேன்
 அடிமனதில் காப்பியக்கோவை வைத்து
கவியொன்று யாத்து நயமெழுத
என் மாணாக்கருக்கு சொலிக் கொடுத்தேன்....

ஐம்பெருங் காப்பியங்கள் கற்பிக்குங்கால்...
ஈழத்து காப்பியக்கோ....
இலவே இலை..................
தண்டமிழின் காப்பியக்கோவையும் - அவர்தம்
தாதை அ மு ஷரிபுத்தீனின் மரபினையும்
கவிஞர் நயீம் ஷரிபுத்தீனின் ஆற்றலையும்
கூடவே சொன்னேன்....
புளகாங்கிதம் அடைந்தேன் நான்....

எத்தனையெத்தனை கவிஞர்கள்....
எத்தனையெத்தனை எழுத்தர்கள்....
என்றாலும்
தட்டிக் கொடுப்போர் எத்தனைபேர்....

காழ்ப்புணர்வும்....
தானென்ற மமதையும் கூடவே பிறப்பதால்
பிரதேசவாதம் தலைவிரித்தாடுதலால்
தள்ளி உதைப்பாரே அதிகம்....!

அடக்கத்தின் அணிகலனாய் கண்டேன்
பண்பின் உறைவிடமாய்க் கண்டேன்
பெருமிதமிலாதவராய்க் கண்டேன்......

காப்பியக்கோ ஜின்னா ஷெரிபுத்தீனை....

தமிழ் வாழுங்கால் ஜின்னா வாழ்வார்.....!

-கலைமகன் பைரூஸ்
2013. 10. 06 6:34





1 கருத்து:

  1. வாழ்த்துகள் கலைமகன் பைரூஸ்..உங்கள் ஆக்கங்கள் எல்லாமே உங்கள் எழுத்தின் ஆளுமையைக் காட்டுகின்றன. உங்கள் எழுத்துக்கள் பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்...

    மீண்டும் வாழ்த்துச் சொல்கிறேன்...

    நன்றி,

    கமலநாதன் (வன்னி)

    பதிலளிநீக்கு