It கலைமகன் கவிதைகள்: என் வாழ்வின் மெழுகுவர்த்திகளை நினைத்துப் பார்க்கிறேன் சதா!

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

என் வாழ்வின் மெழுகுவர்த்திகளை நினைத்துப் பார்க்கிறேன் சதா!

என் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஒளியேற்றியோரின் படங்களை பதிவிடுவதில் எனக்கு ஆத்மார்த்த மகிழ்வு....

எல்லோரும் என்வாழ்வில் ஒளியேற்ற முன், எல்லாம் வல்லாஹ் அல்லாஹ்வே என் வாழ்வில் ஒளியேற்றுகின்றான். அவனுக்கே என் நன்றிகள் எப்போதும் முதலாய்...

அதன் பின், நன்றி மறவாமை பொருட்டு பின்வருவோரை என்றும் நினைத்துப் பார்க்கின்றேன்....

நான் இன்று உண்டியும் உறையுளும் பெற்று சிறப்பாக இருக்க, எனக்கு பல்லாற்றானும் உதவி செய்த , மீள்மொழிவாளரும், சிறுகதை ஆசிரியருமான கலாபூசணம் திக்குவல்லை எம்.எம். ஸப்வான்,


என்னை என்றும் “கலைமகன் என்று விளித்து, என்னை உயர்த்திப் பேசும் நூலாசிரியரும் புரவலருமான ஸெய்யித் ஹுஸைன் மௌலானா

எனது தமிழ் வாழ தனது நூல்களை மடை திறந்த வெள்ளமாய்த் தந்து, எனது ஆக்கங்களை ஏத்திப் போற்றி, தனது வீட்டில் தான் சார்ந்த அனைத்து விடயங்களையும் எனக்குச் சொன்ன, பல்கலை வித்தகர் நஜ்முல் உலூம் எம்.எச்.எம். ஷம்ஸ்

எனது தமிழுக்குத் தீனி போட்ட எனது ஆசான் வித்துவான் எம். ஏ. ரஹ்மான்


எனக்கு “கவித்தீபம்” புகழாரம் தந்த தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் நிறுவுநர் கவிதாயினி கலைமகன் ஹிதாயா ரிஸ்வி

எனது தமிழ்த் தாகத்திற்கு இன்று உந்து சக்தியாக இருக்கும் தமிழ்ச் சங்க, “தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி“யின் வளவாளர்கள்


1. சைவப் புலவர்  சு. செல்லத்துரை (தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்)
2. காப்பியக்கோ ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் (தமிழ்ச் சங்க இணைச் செயலாளர்)
3. சைவப் புலவர் பொன்னுத்துரை
4. அதிபர், பிரபல தமிழாசிரியர் முரளி
5. சித்தாந்தப் பண்டிதர் பேராசிரியர் கனக சபாபதி நாகேஸ்வரன்
6. பிரபல தமிழாசிரியர்

என் எழுத்துக்களை ஏத்திப் புகழ்ந்து, தனது நூல்களில் எனக்கும் இடம்தந்த பன்னூலாசிரியர் திருவாளர் மானா எம்.எம். மக்கீன்

எனது “ஐம்பது சத நாணயம்” எனும் முதலாவது கன்னி ஆக்கத்தை தினகரனில் (சிறுவர் உலகம் - 1985) இல் பிரசுரித்து, தமிழ் மொழியில் பெருவிருப்பும்.. ஆக்கங்கள் படைக்க உந்துதலும் அளித்த திருமதி ஆனந்தி பாலகிட்ணர்

இன்று எனது ஆக்கங்களை தினகரனில் பிரசுரிக்க ஆவன செய்யும் தினகரன் பிரதம ஆசிரியர் திரு. செந்தில் வேலவர்.


தினகரனில் எனது கவிதைகள் வரவும், செந்தூரத்தில் நான் ஒளிரவும் ஒத்தாசையாக நின்ற திருமிகு. விசு கருணாநிதி. இவர், ஏலவே, 2013 ஆம் ஆண்டு தென்றல் - கவிப்பெட்டகத்திற்காக எனைப் பேட்டி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“பூங்காவனம்” சஞ்சிகையில் எனது ஆக்கங்களை ஏத்திப் போற்றிப் பிரசுரித்த - பிரசுரிக்கும் கவிதாயினி ரிம்ஸா முஹம்மத்

“யுவயுகம்”, “உழைப்போம் உயர்வோம்” வானொலி நிகழ்ச்சிகளில் எனைப் பேட்டி கண்டு என்னை அறிமுகம் செய்த பன்னூலாசிரியரும், ஒளி -ஒலி பரப்பாளரும். ஆசிரியருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ்

பத்திரிகைத் துறையில் என்னைப் புடம் போட்ட முன்னாள் சுடர் ஒளி ஆசிரியர் திரு. வித்தியாதரன்

“முஸ்லிம் குரல்” பத்திரிகையில் நான் கணணிப் பக்கவடிவமைப்பாளராகப் பணிபுரியுங்கால் என் கவிதாவாற்றலைக் கண்டு, எனது கவிதைகளையும் பிரசுரிக்க ஆவன செய்த பிரதம ஆசிரியர் திரு. எம். பௌஸர்

“இடி” பத்திரிகையில் எனக்கு எழுதுவதற்குப் பல்லாற்றானும் உதவி செய்த “இடி” ஆசிரியர் திரு. நிஃமத் ஆசிரியர், கவிஞர் எம்.எல்.எம். அன்ஸார்

“வசந்தம்” (தூவானம்) தொலைக்காட்சியில் எனை அறிமுகம் செய்த, சர்வதேச புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின்,
“தூவானம்” நிகழ்ச்சியில் சிறப்பாகப் பேட்டி கண்ட ஒலி - ஒளிபரப்பாளர் திருமதி நாகபூசணி கருப்பையா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக