It கலைமகன் கவிதைகள்: அலக்காய்ப் பறந்தால் ஆலப்பறந்திடச் செயும் இளமை!

திங்கள், 7 செப்டம்பர், 2015

அலக்காய்ப் பறந்தால் ஆலப்பறந்திடச் செயும் இளமை!

---------------------------------------------------------
அலக்காய்ப் பறந்தால்
ஆலப்பறந்திடச் செயும் இளமை!
---------------------------------------------------------
இம்சைகள் பலதந்து இதயத் தலைமோதி
இடுகாடு செலும்வரை வருமே அற்பம்
இம்சித்தவை கொஞ்சிச் சில கொண்டுகரம்
இளமையை கழிப்போம் இதமாக இளையோர்!


சிந்தித்துச் செயலாற்றி சாகசங்கள் புரிந்து
சிந்தைமீது நல்லனவேற்றி நடைபயின்று
சிந்து ஜகத்தில் எம்மாலும் ஆமெலாமென்று
சீரிளமை சாதித்திடபல இளையோர் நாமே!

வானத்து நிலவையும் விண்மீனையும் பிடித்து
வடிவாங் கலைகள் பலவியற்ற முடியுமே
சீனத்து சிரிப்பழகில் நாம் மதிமறந்து
சீரிளமை தனை வீணாய்க் கழிக்கலாமோ?

அற்ப சுகத்திற்காய் அலக்கலக்காய் இளையோர்
அகத்து மறைதனை மறந்து அகம்மாறி
சொற்புதி தென பிறமொழிகளில் மதிமயங்கி
சீரிளமைத் தமிழ் மறந்தால் ஆலாப்பறக்கணுமே!

சொல்வது தவறெனக் கருதுவாரொ டிணைந்து
சொல்லாடல் ஆடுவதால் பயன்தான் என்ன?
சூழ்கலிசூழ் புவியீதில் புதுமைகள் படைத்து
சுந்தரமாய்க் களிப்போம் இளமை கைக்கொண்டு!

---------------------------------------------------------
-கலைமகன் பைரூஸ்
07.09.2015 ந.ப.12.34


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக