It கலைமகன் கவிதைகள்: கொட்டுங்கடீ கும்மியக் கொட்டுங்கடீ

திங்கள், 20 மார்ச், 2017

கொட்டுங்கடீ கும்மியக் கொட்டுங்கடீ

எனது நண்பரொருவரின் வேண்டுகோளுக்கிணங்க...
நானும் எழுதிக் கொடுத்தேன் கும்மிப்பாட்டொன்று..
கன்னி முயற்சி...
பிழைகள் பொறுப்பீர் கவிவாணர்களே...
---------------------

கொட்டுங்கடீ கும்மியக் கொட்டுங்கடீ
கொட்டுங்கடீ கொட்டுங்கடீ கும்மியக் கொட்டுங்கடீ
குதித்துக் குதித்து கும்மியக் கொட்டுங்கடீ
குமிழ்ச் சிரிப்புக் காட்டியே கும்மியக் கொட்டுங்கடீ
குறுநகை புரிந்தே நல்கும்மியக் கொட்டுங்கடீ
கைகளை வீசி வீரமங்கை நாமென்று கொட்டுங்கடீ
காலில் விலங்கு பூட்டுங் காலமதில் கரங்களுயர்த்தி
கன்னியர் மட்டுமல்ல வீரமங்கையரும் நாமென்று
கைகளுயர்த்தி கும்மியக் கொட்டுங்கடீ ….
எதற்கும் அஞ்சாத பெண்டிர் நாமென்று
ஏற்றத்துடன் சுற்றிச் சுற்றி கும்மியக்கொட்டுங்கடீ
எங்களுக்குள் சாதியேதுமில்லை நாமெல்லாம்
ஏற்றங்கொள் சாதியென்று கும்மிதான் கொட்டுங்கடீ
நாங்கள் அடுப்பங்கரை விலங்குகள் இல்லையென்று
நாதமெழுப்பி வளையல்கள் ஓசையெழுப்பவே
தூங்குவோர் எழும்பவே கும்மியக்கொட்டுங்கடீ
குறுநகை புரிந்தே நல்கும்மியக் கொட்டுங்கடீ
தூங்கியது போதும் அறிவில் சிறந்திடுவோமென்றே
தூக்கியே கைகளால் நீங்கள் கும்மியக் கொட்டுங்கடீ
பொங்கியெழ பெண்டியரெல்லோரும் சீராக
பாடிப்பாடி உளம்மகிழவே கும்மியக் கொட்டுங்கடீ

-கலைமகன் பைரூஸ்
19.03.2017
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக