It கலைமகன் கவிதைகள்: உளமதில் இடியாய் இடித்திடு வாய்நீ!

புதன், 10 அக்டோபர், 2018

உளமதில் இடியாய் இடித்திடு வாய்நீ!

அடிமன தினாழத் தினினெனை வாட்டியே

அடிபடர்ந் திடுபா செனவிருந் ததேயடி

கடினமாய் பேரிடியாய் அறைந்திடு கன்னத்தடி

காதினினென் னொலியினின் குறைதந்த தேயாசான்!

 **

தட்டித் தந்திடா தூரினின் தமிழெனை

தகைசால் ஆளுமை யாக்கிட உன்னினன்

கட்டியே கரங்களை நின்றனன் தமிழினின்

கனிமொழி தந்தனர் புலவோர் பண்டிதரே!

 **

எய்தவ னிருந்திட அம்பை நொந்தனர்

எந்தன் செவிப்பறை குறைத்த தொலியினை

நெய்தவ னவனிடம் குறையைப் பகர்ந்தனன்

நேசங் கொண்டவன் கனித்தமிழ் தந்தனன்

 **

புலவோர் பலரும் பகர்ந்தனர் புகழ்மொழி

புகழே நீண்டது என்பதி உயர்ந்தது

நிலனே வாழ்ந்திட செய்தனன் என்மொழி

நாளுமுயர்ந் திடுமென் பெயர்தான் சொலுமே!

 **

காப்பியம்  பலவும் சீராய்க் கற்றனன்

காண்டிகை யுரையும் சீராய் ஏற்றனன்

வாய்ப்பியம் யானும் யாப்பினி னெழுதினன்

வாழ்த்தியே போற்றினர் தகைசால் தமிழோர்!

 **

பிறர்தரு மொழிசெவி வீழ்ந்திடா பொழுதினின்

பண்ணவ னிடம்யான் அழுதே பகர்ந்தனன்

பிறரெனை ஏத்திட உளத்தினின் தமிழ்கொடு

பிஞ்சும னமென்றும் நீகொடு தமிழ்கொடு!

 **

நிறமுனில் வேறிலை செய்திடு நல்லறம்

நிறைவே தந்திடும் நீயறை அவர்மனம்!

அறியா வுளத்தினின் அருளிடு ஒருக்கால்

அடியே னழுதிட அவர்பால் முன்னே!

--

-கலைமகன் பைரூஸ்

10.10.2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக