எலோரும் ஏத்திடத் தானென் னாசானும்
ஏத்தினார் ஏத்தினேன் ஏற்றமாய் என்னில்
அழுதேன் அவர்மொழி கேட்டே யானும்
ஆடித்தான் போனதுள் ளந்தான் பிளந்தது!
ஆழ்தமிழ் தருமிறை நீயழி உளக்கறை!
அடியேன் உளத்தினின் படர்ந்த கறையே!
நீள்தமிழ் தந்திடு மிறைநீ யழித்திடு
நேயம் வைத்தனன் சினந்தான் மறந்தனன்!
செய்தவர் பாவம் உன்னினின் நீதான்
சிறப்பாய் அழிப்பாய் பொழிவாய் அருளே
நெய்திடு அவர்பால் நன்மை நீதான்
நயன்தரு ஆசான் அவர்தான் இக்கால்!
-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்
06.11.2023
தினகரன் வாரமஞ்சரி - செந்தூரம்.
நன்றி -
* பிரதம ஆசிரியர் திரு. செந்தில் வேலவர்
* வகவத் தலைவர் கவிமாமணி என். நஜ்முல் ஹுஸைன் (சேர்) உட்பட வகவ அமைப்பினருக்கு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக