நற்சுவனம் செலதுஆத்தான் இரந்தேனே!
தித்திக்கும் தீந்தமிழ்க்கா வியம்தந்தே நின்றாரே
தெவிட்டாத நல்லறக்கா வியங்களுந்தான் தந்தாரே
புத்திக்கு மினிதான நற்கவியும் ஈந்தாரே
பண்டிதரெம் மௌலானா கலீல்அவ்ன்!
நற்றமிழும் நன்மறையும் நனிசிறந்த தனவவரில்
நற்குலமாம் ஹாஷிமியாம் குலத்தினின னருமந்தன்
சொற்சுவையாய் தந்திட்ட உரைநடையும் சீரியன
சந்தமிகு கவிதைசொல எனில்தந்த பாவுஞ்சீர்
அஸ்ஸபாவில் அருமந்த கலைதந்தார் ஒருக்காலே
அடியேன்பா வெழுதகற்பித் தார்சீராய் அக்காலே
எத்தனைதான் ஏடுகள்நெய் தாலுமன்ன வர்தானே
எடுப்பான கவியுழவன் என்றாரா என்பீர்நீர்
வயதேறி வயதேறிப் போனாலும் அவர்தானே
வளமான புத்தியொடு தானின்றார் நேர்கண்டேன்
நியதியது நிலம்வந்து நலமாக அவரேந்தி(யதே)
நற்சுவனம் சென்றிடவே துஆத்தான் இரந்தேனே!
-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்
03.01.2023
(கன்னலான நற்பாக்கள் பலபடைத்து, இஸ்லாமிய இலக்கியத்திற்கு அழகுசேர்த்த புலவர் ஜெமாலியா கலீல் அவ்ன் மௌலானா (அல்ஹாஷிமியிய்யி) அவர்கள். அன்னார் 03.01.2023 அன்று காலாமானார்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக