மருந்தகத்தின் கண்ணீர் விலை
மருத்துவம் என்றாலே நம்பிக்கை எனும் நதி,
மருந்தகம் என்றாலே உயிர்க்கு ஒளி தரும் சுடர்...
ஆனால் இன்று –
அந்த நதி வணிகம் ஆனது,
அந்த சுடர் பணம் கவரும் பிசாசானது.
சின்ன காய்ச்சலுக்கும் –
ஸ்கேன், எக்ஸ்-ரே, பரிசோதனைப் பில்ல்கள்,
சின்ன நோய்க்கு –
பெரிய மருந்துக் குறிப்புகள்,
ஏழை நெஞ்சங்கள் மட்டும்
அவலின் அடிமை ஆக்கப்படுகின்றன.
வெளிநாடு கனவு காணும் இளைஞன் –
வியர்வை ஊற்றி சம்பாதிக்க நினைக்கிறான்,
ஏஜென்சிகளுக்கு இலட்சம் கொடுத்த பின்பு –
மருத்துவ சோதனையில் சிக்கித் தவிக்கிறான்.
ஏஜென்சி விட்டு விடும் போது,
மருந்தக பில் மட்டும் கையில் எரிகிறது,
அவனது கனவுகள்
பூஜ்யமாகி தரையில் விழுகிறது.
அம்மாவின் கைகள் போல இருந்த
மருத்துவமனைகள், மருந்தகங்கள் –
இன்று காசின் கம்பி கொண்ட
வலையாய்த் திகழ்கின்றன.
ஆனால் –
உண்மை அறிந்த மனிதம்
இன்னும் விழிக்க வேண்டும்,
விழிப்புணர்வு தான்
இந்த வணிக பிசாசை வெல்லும் ஆயுதம்.
✍️ – கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக