It கலைமகன் கவிதைகள்: ஐயா பேராசிரியர் துரை. மனோகரனை வழுத்தினன் யான்!

புதன், 24 டிசம்பர், 2014

ஐயா பேராசிரியர் துரை. மனோகரனை வழுத்தினன் யான்!

சென்ற மாதம் (2014 நவம்பர்) 26 ஆம் நாள்...

நான் எனது மேனிலைக் கல்விக்கான கருத்தரங்கிற்காக பேராதனைப் பல்கலைக்கழக  தொலைத் தொடர் கல்வி நிலையத்திற்குச் சென்றிருந்தேன்...

அன்று தமிழ்ப்பாடம்...


பாட விரிவுரை நிகழ்த்தியவர் பேராசிரியர் ஐயா துரை மனோகரன் அவர்கள்...

அவரின் பாட விரிவுரை கருத்தரங்கிற்காகச் சென்றிருந்த அனைவரையும் பெரும் மகிழ்ச்சிக்குட்படுத்தியது..

அவரது இனிமையான குரல், ஆலாபனை, பேச்சின் ஏற்றத் தாழ்வு, மாணவர்களை நன்கறிந்துகொள்வதற்கான... மாணவர்களை விழிப்புணர்வடையச் செய்வதற்கான சமயோசிதம் (உளவியல் மேலாண்மை), இடைக்கிடையே பரிகாசம் கலந்த உறவினர் போன்ற நடத்தை சத்தியமாக அவரிடம் முழுமையாகத் தமிழ்க் கற்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை எனக்குள் விதைத்தது..

ஒரு பக்கம் அவர் எனது மானசீக குருநாதர் என்பது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை...

ஆயினும், அவராக “நீங்கள் எல்லோரும் என் மாணாக்கரே ” என்ற பேச்சு உளத்து பெருமகிழ்ச்சியையும், கழிபேருவகையையும் என்னுள் விதைத்தது.

சிலப்பதிகார கானல்வரி மனதுள் நிழலாடியதுடன்..நாளையும் அவர் விரிவுரை நிகழ்த்த வர மாட்டாரா? என்ற ஏக்கத்தையும் கூடவே என்னுள் விதைத்தது...

விரிவுரை ஈற்றில் மாணாக்கருக்கான கேள்வி நேரம்..யாரும் கேள்வி கேட்பதாய் இல்லை.. நான் வாழ்த்துக் கவியொன்றை எழுதி அனுப்பினேன்..

அவர் அதனை அவரின் இன்குரலில் வாசித்ததில் நான் பெரும் பேறுற்றேன்...

கவிதையை அவர் வாசித்து முடிந்ததும் கலந்து கொண்ட மாணாக்கரின் கரகொலி விண்ணதிரச் செய்தது..

அடுத்த நாள் எலோரும் எனை “கவிஞர்“ எனப் பேசவும் செய்தது... அந்நாழிகை...

அவரை வழுத்தி நான் எழுதிய கவியிதோ!
-------------------------------------------------------------------
 மதுரக் குரலாள் மாணவ ரெமை
மகிழ்வூட்டி முத்தமிழி னானும்
இதமாக இணைத்திட்ட உமை
இதயத்தி லொட்டினேன் யான்!

களிகொண்டேன் கருத்தினின் கொண்டேன்
கலகலவென்ற கணீர் குரலுடனாய
ஒளிகொள் சிலம்பு ஊறியது உதிரத்தூடு
ஒன்றித்தேன் இதயத்தூடு உம்மை!

வருந்திங்கள் வளமாய் தேரிட
வழங்கிய படையல்கள் வடிவன்றோ
வருபுனல் வழங்கிடும் கொடையென
வழங்கிடு விரிவுரை உளடம் தொட்டதே

-கலைமகன் பைரூஸ்
2014.11.26
---------------------------------------------------------------------------------
திரு. மேமன் கவியுடன் எடுத்துக் கொண்ட படம் கீழே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக