It கலைமகன் கவிதைகள்: எனக்கு வாப்பா வேணும்!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

எனக்கு வாப்பா வேணும்!

உம்மா...
அப்பா... உம்மும்மா....
எங்க வாப்பா எங்க...?
நான் வாப்பாக்கிட்ட
போஹோனும்!

உம்மா...
ஏண்ட வாப்பா தங்கமானவரு
ஏண்ட வாப்பா இரக்கமானவரு
உம்மா
எனக்கு ஒண்டும் வேணாம் உம்மா
எனக்கு வாப்பா வோணும்
எனக்கு வாப்பா வோணும்!

உம்மா...
அப்பா... உம்மும்மா....
எங்க வாப்பா எங்க...?
நான் வாப்பாக்கிட்ட
போஹோனும்!

எனக்கு வாப்பட ஊர் புடிக்கும் உம்மா
வாப்பா எங்க உம்மா
எனக்கு இந்தஊர் பிடிக்கல உம்மா
எனக்கு வாப்பா ஓணம்...
எனக்கு வாப்பும்மா பாக்கோணும்!

உம்மா.. ஏண்ட வாப்பா
எனக்கு ஓணும் உம்மா...
உங்களுக்கு வேணாமா உம்மா...
ஏன்மா.... ? எனக்கு வேணும் உம்மா!

மொண்டசூரீல வாப்பா பத்திக் கேட்டா
நான் என்னும்மா சொல்ல...
நீங்க விரட்டின எண்டு சொல்லவா?
மாமாங்க விரட்டினண்டு சொல்லவா?
எனக்கு அழுக வருதும்மா....
வாப்... பா! வாப்...பா!!

ஏனும்மா எனக்கு இப்படிச் செய்றீங்க
உங்கட கோவத்துக்கு நான்பலியாம்மா
சொல்லுங்கும்மா... சொல்லுங்க...

உம்மா....உம்மா.....
தௌஹீத் காரன் வாப்பா இல்லியா?
அப்ப ஏண்ட வாப்பா யாரும்மா?

நீங்களும் வாப்பாம் சிரிச்சு பேசினநேரம்
நெனவில்லும்மா... நெசமா நெனவில்ல...
உம்மா.. நாங்க மூணுபேரும் நிண்டு
படம் எடுப்போம்மா..
வாப்பாவ வரச்சொல்லுங்கும்மா
வரச்சொல்லுங்க...
எனக்கு வாப்பா வோணும்!

உம்மா வாப்பா பாத்திட்டிருப்பார்
அப்பாக்கு போய் வரச்சொல்லுங்கும்மா
வாப்பா பாவம்மா..
என்ன நெனச்சி அழுவாரும்மா...
அழுவாரு...!

யக்கம் எண்டா என்னும்மா? நான்
தவிக்கனுமா உம்மா சொல்லுங்க...
உம்...ஆ!  வாப்.. பா!! வாப்..பா!!

-கலைமகன் பைரூஸ்
21.08.2015
நன்றி -
www.srilankamuslims.com/
www.vidiyal.lk/
www.importmirror.com/

குறிப்பு - 
இந்தக் கவிதையில் உள்ள படம், முகநூலிலிருந்து பெறப்பட்டது. நீதிகேட்டு, பாதிக்கப்பட்டவர் இட்ட ஆக்கத்தை அடிப்படையாக வைத்தே கவிதை எழுதப்பட்டுள்ளது, இந்தக் கவிதையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதல்ல. மாறாக, அநீதி இழைக்கப்பட்டுள்ள குடும்பம் நீதி கிடைத்து ஒன்றிணைய வேண்டும். குழந்தை உளரீதியாகப் பாதிக்கப்படக் கூடாது... என்பதுவே! - கலைமகன் பைரூஸ்


முகநூல் கருத்துக்கள்:
-----------------------------------
Safran Mohamed Superb

Safran Mohamed Please tag his relations

Nagarajah Ragu குழந்தையின் ஏக்கம் கவியில் தெரிகிறது .

Rajakavi Rahil வார்த்தைகளில் வலிகள் வடிந்தாலும் கவிதையில் மொழியின் வலிமை ..அருமை

Arm Iman குழந்தையின் ஏக்கம் மனதை ஆழமாக தொடுகிறது. பாவம் குழந்தை அதன் ஆசைஅவசரமாக நிறைவேறனும்.

இந்தக் கவிதையை வகவகத்தின் 36 ஆவது கவியரங்கில் (10.04.2017) அன்று வாசித்தேன். எல்லோரினதும் பெரும் பாராட்டைப் பெற்றேன். பாரதி பலாமன்றத்தின் நிறுவுநர்களின் ஒருவரான திரு. மணி அவர்களின் பாராட்டையும் பெற்றேன். கூடவே, வகவத்தின் தலைவர் கவிஞர் நஜ்முல் ஹுஸைன் அவர்களும் முகநூல் உள்பெட்டியில் என்னைப் போற்றியிருந்தார். இறைவனுக்கே புகழனைத்தும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக