It கலைமகன் கவிதைகள்: அகர வித்தக - ககரக் கவி

ஞாயிறு, 3 ஜூலை, 2016

அகர வித்தக - ககரக் கவி

களங்கமில் மனமே
காதல் கொண்டேன் உன்னில்
கிள்ளை மொழி பேசி
கீற்றென நில் மனமே!
குவலயம் செழித்திட மனமே
கூவிடு யாமெலாம் ஒன்றென்று
கெட்டவரழிந்து நல்லோர் தோன்றிட
கேளிர் எலோரும் என்றோது!
கைகள் பலமாய்க் கோத்து
கொக்கரிக்காது சாதி வேறென்று
கோலமிடுவோம் ஒன்றென்றே நாம்
கௌவிடுவோம் தூய சிந்தையுளத்து!

-கலைமகன் பைரூஸ் (இலங்கை)
நன்றி - கவியருவி அகரமுதலி கவிகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக