It கலைமகன் கவிதைகள்: தக்பீர் முழக்கம் செவியினிக்க…

செவ்வாய், 5 ஜூலை, 2016

தக்பீர் முழக்கம் செவியினிக்க…

தக்பீர் முழக்கம் செவியினிக்க… --------------------------------------------------- பண்ணவன் சொல் சிரமேற்கொண்டு பசித்திருந்து பொழுது சாயுங்கால் புண்ணியம் பெற்றிடவே அவாவுற்று பதியினில் செய்திட்டோம் அறம்! விண்ணகம் மண்ணகம் போற்றும் வான்மறை அநுதினம் ஓதிட்டோம் தண்ணளி பெற்றிட்டோம் உயர்சுவனம் தமக்குக் கிடைத்திட இயற்றினோம் பல!
()()()()()() இல்லையென்போர்க்கு இல்லை யெண்ணாது இருப்பதை வாரிவழங்கியே நாம் கல்பினில் கரையிலாமல் கொடுத்திட்டோம் கருணையாளன் நல்சுவனம் பெற்றிடவே சொல்லில் சுத்தம் காத்திட்டோம் சுந்தரசுவனம் ரையான் கிடைத்திட அல்லிலென்றும் நிலையில் நின்றிட்டோம் அழுது நரகவிடுதலைக்காய் மண்டியிட்டோம்! ()()()()()() பரிந்துரைகள் பலவேண்டி இரைஞ்சியே பரிசுபல பெறுதற்கும் முந்தியே சிரம்பணிந்தோம் எலோரும் ஒன்றாய் சொர்க்கத்தின் வாடை உளத்து மணக்கவே சுரக்கும் பண்ணவன் அருட்சுனை சகத்திலன்று அம்மையில் வேண்டினோம் சொரிந்தருள வேண்டும் நீநம்பால் சுவனத்து வாசமென ஏந்தினோம்கரம்! ()()()()()() இன்று தக்பீர்முழக்கம் வையமெங்கும் இங்கிதமாய் ஒலிப்பது கண்டுகளியே சென்றுவா நல்ரமழானே எனத்துயரொடு சோபனந்தான் சொல்லி அனுப்பினோம் வானெங்கும் தக்பீர் முழக்கும் முழங்குது வாழ்வில் மகிழ்வு இன்றுபோலுன்றோ ஒன்றாக நாமெலோரும் கரம்பிணைத்து ஓங்கி உரைப்போம் தக்பீர் செவியினிக்க! “கவித்தீபம்“ கலைமகன் பைரூஸ் 05.07.2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக