It கலைமகன் கவிதைகள்: நிலாமுற்றக் கவிதைகள்

சனி, 15 ஏப்ரல், 2017

நிலாமுற்றக் கவிதைகள்

(1) மௌனம்
---------------------

(2) பாய்கின்ற (வாய்ப்பு வருங்கால் காத்திருத்தல்)
-----------------------
பாய்கின் றபுலி யெலாம் பதுங்கியே புதர்க்குள்
படுத்திருப் பதெலாம் பயந்தாங் கொளி யென்பதற்கா
வாய்புதைத் தேயிருப் போரெ லாம்மூ ட ரன்று
வாய்ப்பு வருங்கால் அடங்கி யிருக்கும் வல்லோரே!
-கலைமகன் பைரூஸ்
நி.மு 603
08.04.2017

(3) வேடிக்கை  (வேடிக்கையே எல்லாம் ஆச்சு!)
-----------------------
வேடிக்கையாச்சு பாரிலெல்லாம் இறைவன் பிடியேதென்று உன்னாது மானிடன்
வாழ்வதற்கு பலவும் பண்ணுகிறான் வீணாகவே காலமதையோட்டி இப்பாரில்
நடிக்கும் மேடையாம் இப்பாரென்ற வல்லவனின் கூற்றினை உன்னாது
தீயசெயல்கள் நாடோறும் செய்கின்றான் அம்மையின் துன்பமது அறிந்தும்!
-கலைமகன் பைரூஸ்
11.04.2017

(4) புத்தாண்டு (புத்தாண்டில் திடம் கொள்வோம்)
------------------------
பூத்திட்ட புத்தாண்டீதில் பண்புகள் பலவும் அகத்துடனே இணைய
மத்தள மோங்கியறைக மடைமை மண்ணினின் முழுதும் மறைய
வித்தக மெங்கும் வரிசையாய் மணங்கமழ வனிதையர் மானம்காக்க
மணங்கமழ் வண்ணத் தமிழினி மாட்சிமைமிகு கலைபல வளர்ப்போம்!
-கலைமகன் பைரூஸ்
14.04.2017

வெற்றிச் சான்றிதழ்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக