It கலைமகன் கவிதைகள்: வீரமுள்ள ஆண்மகன் மனோ!

வியாழன், 18 மே, 2017

வீரமுள்ள ஆண்மகன் மனோ!

வந்தேறு குடிகள் நாமென்றும் புற்றுநோய் எம்மில் தானென்றும்
வாய்கிழியக் கத்திய வக்கில்லா வேஷாதாரிக்கு களிறாய் உயர்ந்து
சொந்தம் எமக்கெலாம் சொந்தமடா எனச் சொல்லி நாணிக்குறுக
செய்தவர் மனோ கணேஷன் தானையா யாருக்குளதோ இவ்வீரம்?

-----


ஈழத்தில் இல்லை உரிமம் தமிழ்ப் பேசுவோர்க் கென்று
இடியாய் இடித்த ஞானமிலா காவிக்கு தக்க பதில்
வீழாத் தமிழன் மனோ கணேஷன் தந்தான் சீராய்
வீரமிவன் யார்க்குத்தான் வருமிங்கு சொல்வார் எவர் இங்கு?

------

இலங்கை எங்கள் பௌத்த நாடென்றும் எம்மொழி மட்டுமே
இந்நாட்டு மொழியென்றும் எம்மினத்து ஆதரவால் வாழ்வோர் நீவிரென்றும்
நிலத்தில் குழப்பம் விளைவிப்பான் தப்பாய்த் தர்க்கிக்க நல்லார்
நம்மனோ கணேஷன் தந்தாரையா நல்லடி தானையா அவன்க்கு!

------

நீசொல்லி மகாவம்சம் நானறியத் தேவையிலை என்று முழங்கி
நீதமாய் வந்தவழி வம்சகதை அவனுக்கே புகட்டி இடுப்பில்
நீசர்முன் அழகாய் கைகட்டி பேசிட்டார் நம்மனோ கணேஷன்
நிச்சயமாய் அவர்பேராழி நமக்கான போராளி வாழ்த்துவம் நாம்!

------

கைகட்டி வாய்புதைத்து காவியுடையின் நாமம் கேட்க சிறுநீர்
கால்வழியாய் ஓடுவார் நிற்க சிங்களவனும் அந்நியனே இந்நாட்டில்
எலோர்க்கும் ஒரேநீதி நம்நாட்டில் என்று சொல்லி சினம்கொள
எடுப்பாய்ச் சொன்ன மனோ கணேஷன் வாழி சீராயிதுபோல்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக